Categories: சினிமா

நடிப்புக்காக ரகுவரன் சொன்ன பொய்.. உண்மையை கண்டுபிடித்ததும் ரஜினி படத்துக்காக இயக்குனர் செய்த செயல்..!

Spread the love

தமிழ் சினிமாவில் வில்லன் கேரக்டர்கள் கச்சிதமாக பொருந்தும் என்றால் அது ரகுவரனுக்கு தான். முதல்வன் திரைப்படத்தில் ரகுவரன் பேசிய டயலாக் இல்லை என்றால் படமே இல்லை. இதனைப் போல மார்க் ஆண்டனி இல்லை என்றால் பாட்ஷா திரைப்படம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு ரகுவரன் வில்லனாக நடித்ததால் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. கோடம்பாக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற நடிப்பு சூறாவளி 90களில் உச்சம் தொட்ட போது அவருக்கு ஈடு கொடுத்து நடித்து தன்னுடைய நடிப்பால் ஆண்டனி கதாபாத்திரத்தையும் மக்கள் மத்தியில் நிறுத்தியவர் தான் ரகுவரன்.

கேமரா முன்பு வந்து விட்டாலே நடிப்பு ராட்சசன் ஆக மாறி விடுவார். திரை உலகமே கொண்டாடிய கலைஞர்கள் பட்டியலில் ரகுவரனுக்கு தனி ஒரு இடம் உண்டு. கேரளாவின் பாலக்காடு, தமிழ் சினிமாவுக்கு தந்த அற்புத கலைஞன் தான் ரகுவரன். இவர் முதலில் அடையாறு திரைப்பட கல்லூரியில் நடிப்புக்கான பட்டப் படிப்பை முடித்த பிறகு சில காலம் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். 1982 ஆம் ஆண்டு தன்னுடைய 23 வயதில் ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்த திரைப்படத்திற்கு விருதுகள் கிடைத்தது. ஹீரோவாக அறிமுகமான அடுத்த ஆண்டு சில்க் சில்க் சில்க் என்ற படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். பிறகு 1986 ஆம் ஆண்டு விசு உடன் அவர் நடித்த சம்சாரம் அது மின்சாரம் என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து சிவா, ஊர்க்காவலன், ராஜா சின்ன ரோஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.  இப்படியான நிலையில் ரகுவரன் வில்லனாக நடித்த பிரபலமான திரைப்படங்களில் ஒன்றுதான் மிஸ்டர் பரத். 1986 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் ரஜினி மற்றும் சத்யராஜ் இணைந்து நடித்த நிலையில் மைக்கேல் என்ற வில்லன் கேரக்டரில் ரகுவரன் நடித்திருந்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது ரகுவரன் ஒரு விபத்தில் சிக்கி காலில் காயமடைந்துள்ளார். இருந்தாலும் அடுத்த நாள் சரியான நேரத்தில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார். அப்போது இயக்குனர் எஸ் பி முத்துராமன் உன்னுடைய காலில் அடிபட்டுள்ளதா என்று கேட்டதும் ரகுவரன் இல்லை என்று பொய் சொல்லி உள்ளார். ஆனால் உண்மையை தெரிந்து கொண்டு எஸ் பி முத்துராமன் மீண்டும் கேட்க, ஆமாம் சார் அடிபட்டுள்ளது, ஆனால் நான் சரியாக நின்று நடித்து விடுவேன் என்று கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட எஸ் பி முத்துராமன், இல்லை வேண்டாம் நொண்டியே நட இதுதான் இந்த கேரக்டருக்கு சரியாக இருக்கும் என்று கூறி அப்படியே நடிக்க வைத்துள்ளார். அதன் பிறகு அந்த கேரக்டரை ஒரு வில்லன் என்பதை விட அந்த கேரக்டருக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து கதையை மாற்றி எஸ்.பி. முத்துராமன் எழுதியுள்ளார். இந்த தகவலை ரகுவரனே ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

“மேடம்… நீங்களே இப்படி பண்ணலாமா…?” விஜயதசமி கொண்டாட்டத்தில் ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட ஐபிஎஸ் அதிகாரி… வைரல் வீடியோவால் சர்ச்சை…!!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…

2 மணத்தியாலங்கள் ago

மிரண்டு ஓடி கார்களை கவிழ்த்த யானை…! சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையுடன் கூடிய அமாரி கீழே விழுந்து சேதம்… பயந்து நடுங்கிய மக்கள்… திகில் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…

2 மணத்தியாலங்கள் ago

பூனையுடன் விளையாடிய 18 மாத குழந்தை… மாடியில் இருந்து தூக்கி வீசிய சிறுவன்… தாயின் விடாமுயற்சியால் அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…

2 மணத்தியாலங்கள் ago

“யார்கிட்ட பேசுற…?” திருமணமான 6 மாதத்தில்…. மனைவியை கொன்றுவிட்டு விபத்து போல நாடகமாடிய கணவன்… விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…

2 மணத்தியாலங்கள் ago

மக்களே உஷார்!… உயிருக்கே ஆபத்தா?… 3 நாள் காய்ச்சல்… பறிபோன 24 வயது இளைஞரின் உயிர்… மருத்துவமனையில் நடந்தது என்ன?…!!

சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…

3 மணத்தியாலங்கள் ago

மனசாட்சியே இல்லையா…? வாலிபரை கட்டை, குழாயால் அடித்து வெளுத்த கும்பல்…. நடுரோட்டில் வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago