Categories: சினிமா

தனது அம்மாவுடன் சுற்றுலா சென்று என்ஜாய் பண்ணும் ராகவா லாரன்ஸ்.. வைரலாகும் வீடியோ..!

Spread the love

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ் நடன இயக்குனராக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான அற்புதம் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதே நேரத்தில் தெலுங்கில் மாஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி மிக பெரிய ஹிட் கொடுத்தார்.

தொடர்ந்து நடிப்பிலும் இயக்கதிலும் கவனம் செலுத்தி வந்தார் ராகவா லாரன்ஸ். 2007 ஆம் ஆண்டு முனி என்ற திரைப்படத்தை இயக்கி சிறந்த நடிகராகவும் இயக்குனராகவும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றார். ஹாரர் திரைப்படமாக உருவான படத்தை குடும்பங்கள் கொண்டாடியிருந்ததை தொடர்ந்து காஞ்சனா காஞ்சனா 1, 2 , 3 என தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களை இயக்கி வருகின்றார்.

அது மட்டும் இல்லாமல் ராஜாதிராஜா, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஜிகர்தண்டா டுப்லெக்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகின்றார். தனது நடிப்பால் புகழையும் பெற்றதை காட்டிலும் தன்னுடைய உதவும் குணத்தால் மிகப்பெரிய இடத்திற்கு உயர்ந்திருக்கின்றார். தற்போது கடந்த மாதம் மே ஒன்றாம் தேதி முதல் மாற்றம் என்ற சேவை அறக்கட்டளையை தொடங்கி பல மக்களுக்கு உதவி செய்து வருகின்றார்.

இவருடன் சேர்ந்து கேபிஒய் பாலா, அறந்தாங்கி, நிஷா உள்ளிட்ட பல பிரபலங்களும் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். முதல் கட்டமாக 10 டிராக்டர்கள் ஊர்களுக்கு அதாவது கிராமங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார் ராகவா லாரன்ஸ். தற்போது வரை ஐந்து டிராக்டர்களை வழங்கி இருக்கின்றார்.

அது மட்டும் இல்லாமல் மருத்துவ உதவி, கல்வி உதவி, பண உதவி என அனைத்தையும் செய்து வருகின்றார். இவருக்கு தனது தாய் மீது மிகுந்த அன்பு இருக்கின்றது, அவருக்காக ஒரு கோயில் ஒன்றை கட்டி இருக்கின்றார். இந்நிலையில் அம்மாவுடன் அவர் வெளிநாட்டிற்கு ட்ரிப் ஒன்று சென்று இருக்கின்றார்.

இது தொடர்பான வீடியோ ஒன்றை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். அதில் அவரது அம்மா சுடிதார் போட்டுக்கொண்டு யானைகளுக்கு பழங்களை வழங்குகின்றார். இந்த வீடியோவை பகிர்ந்த ராகவா லாரன்ஸ் நான் மற்றும் தனது அம்மாவுடன் ஒரு அருமையான வெக்கேஷன் என்று பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

23 minutes ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

24 minutes ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

37 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

1 மணத்தியாலம் ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

1 மணத்தியாலம் ago