சமீபத்தில் விழா ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் நடிகர் பார்த்திபன் பேசியதாவது, முதன்முதலில் சினிமாவில் நடிக்க முயற்சித்த போது நாடகத்துல நான் ராஜாவா வேஷம் போட்டுக்கிட்டு நிற்பேன். ஆனால் சாப்பிடறதுக்கு காசு இருக்காது. சோறு இருக்காது. அப்போ நான் ரப்பர் ஸ்டாம்ப் விக்கிறதுக்கு போனேன். ராவ் ரப்பர் ஸ்டாம்ப் என்று மைலாப்பூர்ல ஒரு ரப்பர் ஸ்டாம்ப் கடை இருக்கும். அங்க போயி ரப்பர் ஸ்டாம்ப் வாங்கி விற்க போனேன். ஒரு ரப்பர் ஸ்டாம்ப் வித்தால் 40 சதவீதம் கமிஷன் எனக்கு கிடைக்கும். 1 ரூபாய்க்கு வித்தால் 40 பைசா கிடைக்கும்.
அப்போது லிமிடெட் சாப்பாடு வந்து 1 ரூபாய் 60 பைசா. அந்த ரப்பர் ஸ்டாம்ப் விக்கிறதுக்காக நான் 2 நாள் போயிட்டு வந்தேன். ஒண்ணுகூட என்னால விற்க முடியலே. ரப்பர் ஸ்டாம்ப் எல்லாம் விற்க முடியாது சார். எல்லாரது வீட்டிலேயும் எல்லாருடைய கடையிலேயும் ரப்பர் ஸ்டாம்ப் இருக்குதுன்னு ராவ் கிட்ட சொன்னேன். அப்போ அவர் என்கிட்ட நீ பேச கத்துக்கணும், அவன் ரப்பர் ஸ்டாம்ப் இருக்குதுன்னு சொன்னாலும் அதை வாங்கிப் பார்த்து பாருங்க, உங்க ரப்பர் ஸ்டாம்ப் கொஞ்சம் தேய்ஞ்சு போயிருக்குது. எங்க ரப்பர் ஸ்டாம்ப் அப்படி தேயாதுன்னு சொல்லி நிறைய கதை விடணும்.
அவனை இன்ப்ளூயன்ஸ் பண்ணி பேசணும். அப்போதான் ரப்பர் ஸ்டாம்ப் விற்க முடியும். அதுக்கு முதலில் நீங்க பேச கத்துக்கணும் என்று ராவ் சொன்னார். அதுக்கு அப்புறம்தான் நான் பேச கத்துக்க முயற்சி பண்ணினேன். அதாவது அந்த 40 சதவீதம் கமிஷன் வாங்க தான் நான் பேசவே கத்துக்கிட்டேன். அப்படி ஆரம்பிச்சு இன்னைக்கு உங்க முன்னாடி நான் மேடையில் வந்து நின்னுக்கிட்டு இருக்கேன் என்று இயக்குனர் பார்த்திபன் பேசியிருக்கும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…