இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘அப்பா’. இந்த படத்தை சமுத்திரக்கனி அவர்களே எழுதி இயக்கி தயாரித்து இருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற ‘சாட்டை’ படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவரைத் தொடர்ந்து இந்த படத்தில் தம்பி ராமையா, நமோ நாராயணா, வினோதினி விக்னேஷ் யுவா லட்சுமி போன்ற பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்திற்கு இளையராஜா அவர்கள் இசை அமைத்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. அதோடு இந்த காலகட்டத்திற்கு தந்தையின் முக்கியத்துவம், கடமை என்ன என்பதை இந்த படம் தெளிவாக சொல்லி இருந்தது.
இந்த படத்தில் அதிகம் சிறு வயதுப் பிள்ளைகள் நடித்து மக்கள் மத்தியில் பரவலாக அறியப் பட்டார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் பரவலாக அறியப் பட்டவர்களில் ஒருவர் தான் நாசத். இவர் இந்த படத்தில் மயில்வாகனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பேசப்பட்டது.
இதனை தொடர்ந்து இவர் தொண்டன், கொளஞ்சி, பிழை போன்ற ஒரு சில படங்களில் நடித்து உள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடியவர் நசாத். இவரின் லேட்டஸ்ட் புகைப்படமும் ரீல்ஸ் வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘அப்பா படத்தில் வந்த பையனா?… இப்போ இப்படி வளந்துட்டாரே என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
திருப்பூரில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், உணவக நிறுத்தத்தில் ஏற்பட்ட தகராறில் பயணியை ஓட்டுநரும் நடத்துநரும் தாக்கிய…
ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்த நெருக்கடியை இந்தியா…
தென்னிந்திய திரையுலகின் எவர்கிரீன் நாயகி த்ரிஷா, தற்போதும் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்களுடன் மிகுந்த நெருக்கத்துடன்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு மாநிலம் முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச்…
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தாக்கம் அரசியல் களத்தில் பெரும்…
2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அரசியல் களம் மிகுந்த எதிர்பார்ப்புடன்…