#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவரின் தம்பி தான் நடிகர் நகுல் . தற்பொழுது இவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கரின் ‘பாய்ஸ்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். இதைத்தொடர்ந்து அவர் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
இவர் நடிகராக மட்டுமில்லாமல் பின்னணி பாடகராகவும் விளங்குகிறார். இவர் தற்பொழுது பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். நடிகர் நகுல் தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி பாஸ்கரன் என்பவரை 2016ல் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு அகிரா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இக்குழந்தையை வீட்டிலேயே வாட்டர் பெர்த் முறை மூலம் பெற்றார் நகுலின் மனைவி. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக போல்லவெர்ஸ்களை கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் நகுல் தனது சிறுவயது புகைப்படத்தையும் , தனது மகளின் சிறுவயது புகைப்படத்தையும் இணைத்து பதிவாக வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அவரது மகள் பார்பதற்கு தந்தையை போலவே அச்சு அசலாக உள்ளார். இதோ அந்த புகைப்படம்..
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…
தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது தாங்கள் சுயமாக எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக்…