Categories: சினிமா

தினமும் தவறாமல் வணக்கம் வைத்த நபர்.. அன்பு கட்டளையுடன் எம்ஜிஆர் செய்த உதவி.. காலில் விழுந்து கண்ணீர் விட்டு அழுத மாற்றுத்திறனாளி..!

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என்று பன்முக திறமை கொண்ட கலைஞராக வலம் வந்தவர் தான் எம்ஜிஆர். இவர் அரசியலிலும் கலக்கினார். முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தான் எம்ஜிஆர் இருந்தார். கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட இந்த கட்சியில் இருந்து கொண்டு மூகாம்பிகை கோவிலுக்கு சென்றது, மருதமலை கோவிலுக்கு சென்றது என்று எம்ஜிஆர் கட்சியில் சில சலசலப்புகளை சந்தித்து இருந்தாலும் படப்பிடிப்பில் சக நடிகையின் மூலமாக ஒரு சம்பவத்தை எதிர்கொண்டார். நாடக நடிகரான எம்ஜிஆர் 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலமாக தான் துணை நடிகராக சினிமாவில் நுழைந்தார்.

அதன்பிறகு தொடர்ந்து பல படங்களில் துணை நடிகர்கள் மற்றும் இரண்டாவது நாயகன் என அழைத்து வந்த எம்ஜிஆர் 10 ஆண்டு இடைவேளைக்கு பிறகு 1947 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்தில் இவருடன் நடிக்க முடியாது என்ற சில நடிகைகள் மறுத்த சம்பவமும் பல நடந்து உள்ளது. பல தடைகளை கடந்து தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட எம்ஜிஆர் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் தனக்கு என்று தனிமுத்திரையை பதித்தார். இவர் முதல் படமான நாடோடி மன்னன் என்ற படத்தை இயக்கி தயாரித்த நிலையில் பெரிய வெற்றியை பெற்று தந்தது. அடுத்தடுத்து பல வெற்றிகளை கொடுத்த எம்ஜிஆர் தன்னுடைய படங்கள் தொடர்பான முடிவை தானே எடுக்கும் நிலைக்கு உயர்ந்தார்.

இப்படியான நிலையில் எம்.ஜி.ஆர் மாற்றுத்திறனாளி நபர் ஒருவருக்கு உதவிய சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. அதாவது எம்ஜிஆர் முதல்வராக இருந்த சமயத்தில் தினமும் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு செல்லும் போது வழியில் மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் அவரின் காரை பார்த்து வணக்கம் வைத்துக் கொண்டே இருந்தார். இதனை கவனித்து அங்கிருந்த சிலர் நீங்கள் தினமும் எம்ஜிஆருக்கு தவறாமல் வணக்கம் வைத்தால் அவர் என்ன இறங்கி வந்து உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டுவிட்டு செல்வாரா என ஏளனமாக கேட்க நாம் தினமும் தவறாமல் கடவுளை வணங்குகிறோம் அவர் இறங்கி வந்து நமக்கு பதிலுக்கு என்ன வேண்டும் என்று கேட்பாரா என்ற எண்ணத்தில் தான் வணங்குகிறோமா என்று பதிலளித்தார்.

அப்படி ஒரு நாள் எம்ஜிஆர் பலத்த பாதுகாப்புடன் காரில் பயணித்துக் கொண்டிருக்கும் போது காரை நிறுத்திவிட்டு அந்த மாற்றுத்திறனாளி நபரிடம் சென்று தினமும் நீங்கள் தவறாமல் என்னுடைய காருக்கு வணக்கம் வைக்கிறீர்கள் நான் உங்களுக்கு பதிலுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்க அந்த நபரோ நான் நடக்க முடியாத ஊனமற்றவன். தினமும் யாசகம் பெற்று தான் குடும்பத்தை நடத்தி வருகிறேன் என்று கூற எம்ஜிஆர் உடனே கையில் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து இந்த பணத்தில் ஒரு பெட்டிக்கடையை வைத்து பிழைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு கூடவே ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.

அதாவது நீங்கள் உண்மையிலேயே என்னுடைய ரசிகராக இருந்தால் உங்கள் கடையில் பீடி சிகரெட் விற்கக் கூடாது என கட்டளையிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் இனி வேற ஏதாவது உங்களுக்கு உதவி வேண்டுமென்றால் வழியில் நிற்க வேண்டாம் நீங்கள் என்னை வீட்டிற்கு வந்து சிந்தியுங்கள் என்று எம்ஜிஆர் கூற அதனை கேட்டதும் அந்த மாற்றுத்திறனாளி நபர் எம்ஜிஆரின் காலில் விழுந்து கண்ணீர் விட்டு கதறி எழுதுள்ளார்.

Nanthini

Recent Posts

உள்ளாட்சி தேர்தல் ரத்து?.. அடுத்த 6 மாதங்களுக்கு தமிழக அரச எடுத்த அதிரடி முடிவு….. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, உள்ளாட்சி நிர்வாகத்தைச் சீராக நடத்தும் பொருட்டு அடுத்த 6 மாதங்களுக்கு அதிகாரிகளைத்…

37 seconds ago

“முதல்வரே…. நயினார் நாகேந்திரனை கைது பண்ண தில் இருக்கா?”…. அரசியல் களத்தை அதிரவிட்ட கனிமொழியின் ஆவேச பேச்சு…!

தாராபுரம் இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவின் கைது மற்றும் திமுக கவுன்சிலரின் அவதூறு பேச்சு குறித்து கனிமொழி…

6 minutes ago

“நான் என்ன போதைப்பொருளா கடத்தினேன்?”…. கைதுக்குப் பின் கார்த்திகா ஆவேசம்…. 15 நாள் சிறையில் அடைப்பு….!

தாராபுரம் தொகுதியில் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாம் தமிழர் கட்சி சார்பில் அனுமதி…

14 minutes ago

நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்த தனியார் பேருந்து…. 15 பயணிகளின் நிலை…. விருத்தாசலம் கோர விபத்து….!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தம் பகுதியில், தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின்…

20 minutes ago

“எனக்கு அவன் தான் வேணும்…” திருமணத்தை நிறுத்த அடம்பிடித்த மகள்… தூங்கிக்கொண்டிருந்த போது தலையில் சுட்ட கொடூர தந்தை… பகீர் பின்னணி…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டம் போங்காவ் பகுதியில், தந்தை நிச்சயித்த திருமணத்தை மறுத்துத் தான் காதலித்த நபரையே திருமணம் செய்யப்…

21 minutes ago

அண்ணன் வலது கரம் யார்?…. பனையூரில் வெடித்த உச்சக்கட்ட உட்கட்சி மோதல்…. மாஜிக்களுக்குப் பின் புதிய கட்சியில் வெடிக்கும் பனிப்போர்….!

தமிழக அரசியலில் தற்போதைய நிலவரப்படி, தேர்தல் வெற்றிகளுக்கு அப்பால் கட்சிகளுக்குள் நடக்கும் உட்கட்சி மோதல்களே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.…

25 minutes ago