இலங்கையில் பிறந்த எம்ஜிஆர் தமிழகத்தில் குழந்தை நட்சத்திரமாக நாடகங்களில் அறிமுகமாகி 1935 ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலமாக திரையுலகில் துணை நடிகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல படங்களில் முக்கியத்துவமான மற்றும் துணை நடிகராக நடித்திருந்த எம்ஜிஆர் ஒரு படத்தில் ஒரு சண்டைக் காட்சிக்காக மட்டுமே நடித்துள்ளார். 10 வருட இடைவேளைக்குப் பிறகு 1947 ஆம் ஆண்டு ஹீரோவாக உயர்ந்தார். ஹீரோவாக பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து வந்த எம்ஜிஆர் ஒரு கட்டத்தில் தோல்வியை சந்தித்ததால் தானே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக களம் இறங்கி நாடோடி மன்னன் என்ற படத்தில் நடித்தார்.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் வளம் வந்த எம்ஜிஆர் அரசியலிலும் தன்னை தடம் பதித்து கொண்டார். தமிழ் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் எம்ஜிஆர். தன் வாழ்நாளில் எம்ஜிஆர் செய்த உதவிகள் ஏராளம். இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரிய கூடாது என சொல்வார்கள். அதுபோல எம்ஜிஆர் தன்னை யார் என காட்டிக் கொள்ளாமலேயே பலருக்கும் பலவிதமான உதவிகளை செய்துள்ளார். அதன்படி பிரபல நடிகர் எஸ்.வி ராமதாஸ் அவர்களுக்கு எம்ஜிஆர் வித்தியாசமான முறையில் உதவி செய்துள்ளார்.
அதாவது எம்ஜிஆர் திரைப்படங்களில் நடித்த காலகட்டத்தில் பிரபல துணை நடிகர் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் கலக்கி வந்த எஸ்வி ராமதாஸ் நெருங்கிய நண்பர் ஒருவர் புதிய வீடு ஒன்று விலைக்கு வருவதாக கூறியுள்ளார். அதனால் தான் இத்தனை வருடங்களாக சம்பாதித்த பணத்தை வைத்து வீடு வாங்கலாம் என்று எஸ் வி ராமதாஸ் முடிவு செய்த நிலையில் 10 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தது போக மீதி பணம் தருவதற்கு என்ன செய்வது என்று அவருக்கு தெரியவில்லை. அப்போது அவருடைய நண்பர் நீ எம்ஜிஆர் கிட்ட உதவி கேட்டுப்பார் என்று கூற எஸ்வி ராமதாஸ் எம்ஜிஆரிடம் சென்று தான் புதிய வீடு வாங்க உள்ளதாக கூறிய நிலையில் எவ்வளவு பணம் என்று தெரியாமல் எதற்கு அவசரப்பட்டு அட்வான்ஸ் கொடுத்தார் இப்போது என்னிடம் பணம் எதுவும் இல்லை என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டார்.
இதனால் ராமதாஸ் மன வருத்தத்துடன் வீடு திரும்பிய நிலையில் அவர் சென்ற பிறகு எப்படி உதவி செய்வது என்று யோசித்து கொண்டு இருந்த எம்ஜிஆர் தனக்கு தெரிந்த தயாரிப்பு நிறுவனங்களுக்கு போன் செய்து இனி நீங்கள் தயாரிக்க கூடிய படங்களில் எஸ்வி ராமதாஸுக்கு ஒரு கதாபாத்திரத்தை கொடுத்து அவருக்கு இப்போதே முன் பணம் கொடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளார். எம்ஜிஆரின் சொல்லுக்கு இணங்க ஐந்து தயாரிப்பு நிறுவனங்கள் ராமதாஸுக்கு முன்பணம் கொடுத்து புக் செய்த நிலையில் அந்த பணத்தை வைத்து ராமதாஸ் தனது புதிய வீட்டை வாங்கி விட்டார். இப்படி எம்ஜிஆர் தெரிந்தும் தெரியாமலும் பலருக்கும் செய்த உதவிகள் ஏராளம்.
நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் கடின உழைப்பின் மூலம் ஈட்டிய பணத்தைப் பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புவது இயல்பானது. பங்குச்சந்தை போன்ற…
விஜய்க்கு 'பூவே உனக்காக' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்து, அவரது திரைப்பயணத்தில் முக்கிய பங்கு வகித்தவர் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி. அண்மையில்…
நடிகர் விஜய் தனது திரைப்பயணத்தின் உச்சத்தில் இருக்கும் வேளையில், ஒரு படத்திற்கு சுமார் 275 கோடி ரூபாய் வரை ஊதியமாகப்…
வயிறு உப்புசம் என்பது இன்றைய காலகட்டத்தில் பலரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான செரிமானப் பிரச்சனையாகும். இரைப்பை குடலியல் நிபுணர் Dr.…
வீடுகளில் கழிவறையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் கடுமையான ரசாயனங்களுக்குப் பதிலாக, பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கலவை ஒரு சிறந்த…
தமிழக அரசியலில் 2017-ம் ஆண்டு அரங்கேறிய கூவத்தூர் அதிரடிச் சம்பவங்கள், சுமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது புதுச்சேரி பூரணாங்குப்பம்…