தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக கொடி கட்டி பறந்தவர் தான் நடிகர் மனோபாலா. திருவாரூர் அருகே நல்லிணத்தை பூர்வீகமாக கொண்ட மனோபாலா சிறுவயது முதலை சினிமா மீது தீராத காதல் கொண்டிருந்ததால் கல்லூரி படிப்பை முடித்த உடனே வீட்டில் கூட சொல்லிக் கொள்ளாமல் ரயில் ஏறி சென்னைக்கு கிளம்பினார். இங்கு வந்து தனது அக்காவின் வீட்டிற்கு சென்ற அவர் அங்கு தங்கி படங்கள் பார்ப்பதை வேலையாகவும் சினிமாவில் உதவி இயக்குனராக சேருவதை இலக்காகவும் கொண்டு செயல்பட்டார். பிறகு ஒரு பத்திரிக்கையாளராக தனது பணியை தொடங்கிய மனோபாலாவிற்கு நடிகர் கமல்ஹாசனின் நட்பு கிடைத்தது.
அதன் மூலம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். உதவி இயக்குனராக புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய மனோபாலா, நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், டிக் டிக் டிக், நிழல்கள் மற்றும் அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட பல திரைப்படங்களில் பாரதிராஜாவிடம் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து ஆகாய கங்கை என்ற திரைப்படம் மூலம் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து படங்களிலும் நடிக்க தொடங்கினார்.
ரஜினி மற்றும் கமல் என அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் மனோபாலா சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து பிறகு பல திரைப்படங்களிலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். ஒரு பக்கம் நடிகராகவும் மறுபக்கம் இயக்குனராகவும் தனது சினிமா வாழ்க்கையில் உச்சத்தில் இருந்தார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த மனோபாலா கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் உயிரிழந்தார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இப்படியான நிலையில் மனோபாலா தமிழ் சினிமாவை தாண்டி இந்தி படத்தையும் இயக்கியுள்ளார். அதாவது மனோபாலா ஒரு இயக்குனராக 1988 ஆம் ஆண்டு விஜயகாந்த் வைத்து இயற்கை திரைப்படம் தான் என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான். இந்தத் திரைப்படம் அனைவர் உடைய பாராட்டுக்களையும் பெற்ற தமிழ்நாட்டில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இந்த தகவலை அறிந்த பாலிவுட் நடிகர் ஜிஜேந்திரா, அதே கதையை இந்தியிலும் இயக்க சொன்னார். அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ஜிஜேந்திரா.
பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் மகள் ரேகா, நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் ராதிகா ஆகியோர் நடித்த அந்த திரைப்படம் Mera Pati Sirf Mera Hai என்ற தலைப்பில் ஹிந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் இந்தி மட்டுமல்லாமல் கன்னடத்திலும் மனோபாலா ஒரு படத்தை இயக்கியுள்ளார். இவ்வளவு திறமைகளை கொண்ட காலத்தில் ஒரு காமெடி நடிகராக அறியப்பட்டார்.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் ஜலசந்தி காரணமல்ல…
தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும்…
தானேயில் உள்ள டீன் ஹாத் நாகா அருகே தவறான பாதையில் வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், காரில் பயணித்த…
தமிழக அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்கள், தங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க வேண்டும்…
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.பாபு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகவுள்ள நிலையில், அவரது உடல்நிலை…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவருவது குறித்து அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பரவலான பேச்சுகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில், தங்களது…