Categories: சினிமா

படப்பிடிப்பில் சோகத்தில் இருந்த நடிகை.. காரணத்தை அறிந்து கலங்கிப்போன மம்மூட்டி.. நடந்தது என்ன..?

Spread the love

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் மம்மூட்டி. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர் ஒரு வழக்கறிஞராக இருந்தாலும் கலைமீது தீராத ஆர்வம் கொண்டிருந்த காரணத்தால் சினிமாவில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று ஆர்வத்தோடு இருந்துள்ளார். 1971 ஆம் ஆண்டு அனுபவங்கள் பாலி சிக்கல் என்ற திரைப்படம் மூலமாக தான் இவர் முதல் முறையாக சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு 1976 ஆம் ஆண்டு எம்டி வாசுதேவன் நாயரின் அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து அவருடைய இயக்கத்தில் தேவலோகம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் மம்முட்டியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

தொடர்ந்து அவர் நடித்த படங்கள் வரிசையாக சூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றார். மலையாளத் திரை உலகில் இவர்தான் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த ஹீரோ. மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்தாலும் தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் வெளியான மௌனம் சம்மதம் மற்றும் அழகன் ஆகிய திரைப்படங்கள் தமிழில் மெகா ஹிட் கொடுத்தன. அதனைப் போலவே தமிழில் இவர் நடித்த மறுமலர்ச்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மற்றும் ஆனந்தம் உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். தற்போது மலையாள திரை உலகில் முன்னணி சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் மம்முட்டி நடிகை ஒருவரை கண்டு படப்பிடிப்பில் கண்ணீர் விட்ட சம்பவத்தை நடிகர் சித்ரா லட்சுமணன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில், மம்முட்டி ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அந்தப் பாடல் காட்சி எப்படி என்றால் நடிகை விரததாபத்தில் இருப்பது போன்ற காட்சியாகும். அப்போது எப்பவுமே கலகலப்பாக இருக்கக்கூடிய அந்த நடிகை அன்று மிகுந்த சோகத்துடன் இருந்தார். மம்முட்டியுடனும் அவர் பேசவில்லை. இதனை முதல் நாள் கவனித்த மம்முட்டி மறுநாள் பார்க்கையில் அந்த நடிகை இருமடங்கு சோகத்துடன் இருப்பது முகத்தில் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.

இதனால் என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ள மம்முட்டி அந்த நடிகையிடம் சென்று ஏன் இரண்டு நாட்களாக சோகத்துடன் இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நடிகை என்னுடைய சோகத்தை உங்களிடம் சொன்னால் கட்டாயம் அதனை உங்களால் தீர்த்து வைக்க முடியாது அது மட்டும் அல்லாமல் உங்களையும் நான் சோகத்தில் வாழ்த்த விரும்பவில்லை என்று கூறியுள்ளார். அதன் பிறகு படப்பிடிப்பு நடந்து முடிந்ததும் சுமார் 2 மணி நேரம் கழித்து மம்முட்டியின் அருகில் வந்து அமர்ந்த அந்த நடிகை என்னுடைய பிரச்சனைக்கு உங்களிடம் இருந்து தீர்வு கிடைக்காது என்று தெரியும் இருந்தாலும் என்னுடைய சோகத்தை உங்களிடம் சொன்னால் சற்று ஆறுதல் கிடைக்கும் என நம்புகிறேன் எனக் கூறி தன்னுடைய சோக கதையை சொல்ல ஆரம்பித்தார்.

என்னுடைய வெளிநாட்டு பயணத்தில் கப்பலில் வேலை செய்யும் ஒரு நபரை நான் சந்தித்தேன். சில நாட்களுக்குள்ளையே எங்களுக்குள் அப்படி ஒரு காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம். ஒரு மாத பயணத்திற்குப் பிறகு இந்தியா திரும்பிய நான் அவரை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவரை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவருடைய டெலிபோன் நம்பரை கண்டுபிடித்து அவருடைய வீட்டுக்கு நான் போன் செய்தேன். அப்போது போனில் பேசியவர் இடம் என் காதலரின் பெயரை சொல்லி அவர் இல்லையா என்று கேட்டேன். அதற்கு நீங்க யாரு என்று கேட்டதும் நான் அவருடைய காதலி என்று சொல்லி அவரிடம் நான் பேச வேண்டும் அவர் எங்கே என்று கேட்டேன்.

அதற்கு அங்கிருந்து வந்த பதில் நான் அவருடைய அப்பா தான் பேசுகிறேன் என் மகன் மூன்று வாரங்களுக்கு முன்பு ஒரு வாகன விபத்தில் உயிரிழந்து விட்டான் என்று கூறினார் என அந்த நடிகை சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது. அவர் சொன்னதைப் போல என்னால் அவருடைய சோகத்தை தீர்த்து வைக்க முடியவில்லை இருந்தாலும் அவருடைய சோகத்தை பகிர்ந்து கொள்ளும் ஒரு நபராக நான் இருந்தேன் என்பதில் மகிழ்ச்சி என மம்முட்டி ஒரு பேட்டியில் கூறியதாக சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

5 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

6 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

6 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

6 மணத்தியாலங்கள் ago