#image_title
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடிகர்கள் சிம்பு, கமலஹாசன், விஷால், தனுஷ் ஆகிய நான்கு பேருக்கும் ரெட் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் கமல்ஹாசன், சிம்பு, தனுஷ், விஷால் இவர்கள் மீது ரெட் கார்ட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், அதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் தொகையை பெற்றுக்கொண்டு குறிப்பிட தேதியில் படத்தை நடித்துக் கொடுக்காத காரணத்தினால் அவர்களுக்கு ரெட் காடு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த தகவல் பல ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்த நிலையில் தற்போது தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி முருகன் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: “நேற்று ஊடகங்களில் வெளியான தவறான ஒரு செய்தியை பார்த்து பேர் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.
நடிகர் கமலஹாசன், தனுஷ், சிம்பு, விஷால் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு இனி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைப்பு வழங்காது என்று ஊடகங்களில் செய்தி பரவியது. இது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் என்ற முறையில் இந்த தவறான செய்திக்கு விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளேன்.
நடிகர் சங்கம் சார்பாக நடிகர்கள் கமலஹாசன், தனுஷ், சிம்பு, விஷால் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் எந்த ஒரு புகார் நிலுவையில் இல்லை. இது போன்ற அவதூறு செய்திகளை பரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இது தொடர்பாக விசாரித்ததில் முன்னணி நடிகர்கள் சிலர் மீதான புகார்கள் குறித்து ஆலோசித்தோமே தவிர எந்த வித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என்பதை உறுதி செய்ய விரும்புகிறேன்.
தொடர்ந்து எங்கள் சங்க உறுப்பினர்கள் தொடர்பான துறை ரீதியான தவறான தகவல்களை பரப்புவோருக்கு பொறுப்புள்ள ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். துறை சார்ந்த பல சிக்கல்களுக்கு இடையே தயாரிப்பாளர் சங்கமும் தென்னிந்திய நடிகர் சங்கமும் ஒரு இணக்கமான நட்புறவை கொண்டுள்ளது. அதற்கு ஊறு விளைவிக்க நினைக்கும் சில விஷமிகளின் இந்த முயற்சி ஒருபோதும் பலன் தராது” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், அக்கட்சிக்கு ‘விசில்’ சின்னம்…
பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ல் அனைவரையும் கவர்ந்த போட்டியாளரான கானா வினோத், இறுதிப் போட்டி வரை செல்லும் வாய்ப்பு…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சியான திமுக ஒரு நூதனமான தேர்தல் வியூகத்தைக் கையில் எடுத்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும்…
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்காகச் சென்ற மூதாட்டி ஒருவர், எதிர்பாராத…
பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்தியுள்ளது, இது பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களாக அதிமுக கூட்டணியில் அங்கம்…