Categories: CINEMA

தாத்தா வந்துட்டாரு.. உண்மைலே மிரள விட்டுடாரு.. வெளியானது ‘இந்தியன் 2’ படத்தின் ட்ரைலர்..

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வளம் வருபவர் நடிகர் கமலஹாசன். இவர் தற்போது சினிமாவில் மீண்டும் தனது திரை பயணத்தை தொடங்கி இருக்கின்றார் என்று தான் கூற வேண்டும். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விறுவிறுப்பாக அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். அதன்படி இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதை தொடர்ந்து கல்கி 2829 AD என்ற திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். மேலும் தெலுங்கில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படி சினிமாவில் பிஸியாக நடித்து வரும் கமலஹாசன் ஒரு பக்கம் தனது ராஜ்கமல் ஃபிலிம் சார்பாக பல திரைப்படங்களையும் இயக்கி வருகின்றார் .

இந்நிலையில் இன்று காலை இந்தியன் 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன், இயக்குனர் சங்கர், நடிகர் சித்தார்த், இசையமைப்பாளர் அனிருத், பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் செய்தியாளர்களுக்கும் மீடியா பிரபலங்களுக்கும் ட்ரெய்லரை போட்டு காட்டியிருந்தார்கள்.

அதைத்தொடர்ந்து பேசிய கமலஹாசன், சங்கர் ஆகியோர் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார்கள். இன்று மாலை 7 மணிக்கு யூடிபில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்று கூறியிருந்தார்கள். இந்த திரைப்படம் வருகிற ஜூலை 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் கமலஹாசன் உடன் இணைந்து சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து இருக்கின்றது. இப்படத்தின் காட்சிகள் இந்தியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் பிரம்மாண்டமாக இருக்கும் என்று பத்திரிகையாளர்கள் பலரும் கூறி வந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கின்றது. இதில் கமலஹாசன் இந்தியன் தாத்தாவாக நடித்து அசத்தி இருகின்றார். கட்டாயம் இந்த திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என பலரும் கூறி வருகிறார்கள். இந்த ட்ரெய்லர் இதோ..

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

அந்த வார்த்தையை சொல்லாதீங்க.. பெண்களை அதை மட்டும் வச்சி எடை போடுறது எனக்கு பிடிக்காது.. நச்சுன்னு பதில் சொன்ன பெப்சி உமா..!!

90ஸ் காலகட்டத்தில் பிரபல தொகுப்பாளனியாக வலம் வந்தவர் பெப்சி உமா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பெப்சி உங்கள் சாய்ஸ்…

2 மணி நேரங்கள் ago

தயங்கிய இசையமைப்பாளர்.. பாடலின் வரியை கேட்டுவிட்டு நான் தான் பாடுவேன் என அடம் பிடித்த ஜி.வி பிரகாஷ்..!!

தமிழ் சினிமாவில் ஏ.ஆர் ரகுமான், ஜிவி பிரகாஷ், அனிருத், யுவன் சங்கர் ராஜா, இமான் ஆகியோர் தங்களது இசையால் ரசிகர்களை…

3 மணி நேரங்கள் ago

நீர்வீழ்ச்சியில் கவர்ச்சி குளியல் போட்ட நடிகை ஐஸ்வர்யா மேனன்.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

நடிகை ஐஸ்வர்யா மேனன் மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும்…

4 மணி நேரங்கள் ago

நயன்தாரா புருஷன்றதுக்காக இப்படியா..? படப்பிடிப்பில் ஓவரா அலும்பு பண்ணும் விக்னேஷ் சிவன்.. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தான்..!

படப்பிடிப்பு தளத்தில் விக்னேஷ் சிவன் ஓவர் அடாவடித்தனம் பண்ணுவதாக பலரும் கூறி வருகிறார்கள். தமிழ் சினிமாவில் தற்போது ஒரு முன்னணி…

4 மணி நேரங்கள் ago

குழந்தை இல்ல.. 8 வருஷமா பிரிஞ்சி இருந்தோம்.. முதல் முறையாக மனம் திறந்து பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன்..!!

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கடந்த 2006-ஆம் ஆண்டு ரிலீசான சக்கர முத்து என்று மலையாள திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.…

4 மணி நேரங்கள் ago

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தினமும் லேட்டா வரும் நடிகர் சூர்யா.. கங்குவா படம் முடிஞ்சும் இதே நிலைமையா.. காரணம் என்ன தெரியுமா..?

கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திலும் நடிகர் சூர்யா தினமும் லேட்டாக வருவதாக புகார்…

5 மணி நேரங்கள் ago