#image_title
1960-களிலேயே சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில், முகம் தெரியாத கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுண்டமணிக்கு பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படம்தான் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இருந்து அவரை டிரிகர் செய்யும் கதாபாத்திரத்தில் கவுண்டமணி கலக்கியிருப்பார். படத்தில் அவர் சொல்லும் ‘பத்த வச்சிட்டியே பரட்ட்’ வசனம் இன்று வரை பிரபலமாக இருந்து வருகிறது.
16 வயதினிலே திரைப்படம் பெரிய ஹிட்டானதும் அடுத்தடுத்து அவருக்கு உடனேயே பெரிய வாய்ப்புகள் உருவாகிவிடவில்லை. கிடைத்த கதாபாத்திரங்களில் தலைகாட்டி வந்தார். 80 களுக்கு பிறகே அவர் செந்திலோடு இணைந்து தங்களுக்கென ஒரு ஸ்டைல் காமெடியை உருவாக்கினார்.
கவுண்டமணியின் பாணியைதான் தற்போது சந்தானம் மற்றும் யோகி பாபு ஆகிய இருவருமே ஃபாலோ பண்ணி வருகின்றனர். இடையில் கவுண்டமணி சில ஆண்டுகள் அவரின் உடல் நலக்குறைவு காரணமாக சினிமாவில் இருந்து விலகியிருந்தார். ஒரு இடைவெளிக்குப் பிறகு அவர் கதாநாயகனாக நடித்த திரைப்படம்தான் ’49 O’ என்ற திரைப்படம்தான். பொதுவாக நேர்காணல்கள் எதுவும் கொடுக்காத கவுண்டமணி, அந்த பட ஷூட்டிங்கின் போது ஒரு நேர்காணலை ஒரு ஊடகத்துக்குக் கொடுத்திருந்தார்.
அப்போது அவரிடம் “கடைசியாக பாத்த படங்களில் எது உங்களுக்குப் பிடித்திருந்தது?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் “நான் தமிழ்ப் படமே பார்ப்பதில்லை. ஏன் பாக்கனும் சொல்லுங்க. பாக்கனும்னு நெனச்சா ஸ்ட்ரெயிட்டா ஹாலிவுட் படம்தான் பாப்பேன். ஹாலிவுட்ல வர்ற எல்லா படமும் பாப்பேன்” எனக் கூறியுள்ளார். தமிழ்ப் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் ஒருவர் இப்படி படமேப் பார்ப்பதில்லை என சொல்வது எந்தவிதத்தில் சரியாக இருக்கும்.
அப்படி என்றால் அவர் நடிக்கும் படங்களைக் கூட பார்க்க மாட்டாரா? என்ற கேள்வுகள் எழலாம். ஆனால் நான் ஹாலிவுட் படம் மட்டும்தான் பார்ப்பேன் என சொல்வதை பேஷனாக சொல்லும் சில பீட்டர்களைப் போலதான் கவுண்டமணியின் ஒரு ஸ்டைலுக்காக சொல்கிறாரா என்ற சந்தேகமும் எழுகிறது.
இளம்பெண்ணிற்கு பெற்றோர் பார்த்து கிராமத்திலேயே முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். ஆனால், திருமணத்திற்குப் பிறகும் அந்தப் பெண்ணின் கவனம் தன்…
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகையை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்…
ஹைதராபாத் பாலநகர் மேம்பாலம் அருகே வியாழக்கிழமை மதியம் 3.30 மணியளவில் சோகமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. ஷாபூரிலிருந்து அமீர்பேட்டையிலுள்ள தனது…
கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய 67 வயதான லக்ஷ்மம்மா என்ற மூதாட்டி, மீண்டும் வீடு திரும்பவில்லை.…
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…