Categories: CINEMA

‘மாமன்னன்’ பட ‘ரத்னவேல்’ நடிகர் பஹத் பாசிலின் பிறந்தநாள்… ரொமான்டிக்காக வாழ்த்து கூறி பதிவு வெளியிட்ட மனைவி நஸ்ரியா…

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் மாமன்னன். இத்திரைப்படம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. பொதுவாக படத்தில் ஹீரோ கதாபாத்திரம் தான் ரசிகர்களால் கொண்டாடப்படும்.

ஆனால் இத்திரைப்படத்திலோ வில்லனாக நடித்த  நடிகர் பஹத் பாசிலின் ரத்னவேல் கதாபாத்திரம் சமூகவலைத்தளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் பகத் பாசில் சினிமாவில் கடந்த 2002-ம் ஆண்டு அறிமுகமானார். அதுவும் அவரது தந்தை பாசில் இயக்கிய கையேதும் தூரத் என்கிற படம் மூலம் அறிமுகமானார்.

அப்படம் தோல்வியை தழுவியதும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார் பகத். இவரெல்லாம் நடிகரா என கேலி செய்தவர்களும் உண்டு. இதனால் சினிமாவை விட்டு விலகிய பகத், 7 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் கேரளா காஃபே என்கிற படம் மூலம் மீண்டும் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து 2011-ம் ஆண்டு பகத் பாசில் நடிப்பில் வெளிவந்த சப்பா குரிஷு என்கிற திரில்லர் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

அப்படத்திற்காக அவருக்கு கேரள அரசின் மாநில விருதும் கிடைத்தது. அழகாக இருந்தால் தான் சினிமாவில் சாதிக்க முடியும் என்கிற மாய பிம்பத்தை தகர்த்தெறிந்தவர் பகத். இவர் உயரமாகவோ, ஹேண்ட்சம் ஆகவோ இல்லாவிட்டாலும் இவரின் நடிப்புத் திறமையால் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.

தமிழிலும் நான்கு தரமான படங்களில் நடித்திருக்கிறார் பகத் பாசில், அவர் முதன்முதலில் கோலிவுட்டில் நடித்த திரைப்படம் வேலைக்காரன். அப்படத்தில் வில்லனாக நடித்த பகத் பாசில், பின்னர் தியாகராஜா குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். இதையடுத்து கடந்த ஆண்டு கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் அமர் என்கிற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார்.

நடிகர் பகத் பாசிலுக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர் நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இன்று நடிகர் பஹத் பாசில் தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து கூறி நடிகை நஸ்ரியா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Begam

Recent Posts

ராமராஜன் டு ஜிவி பிரகாஷ் வரை.. காதல் திருமணம் செய்து விவாகரத்து பெற்ற பிரபலங்கள்.. இதுல தனுஷ் தான் ஹைலைட்டே..!

தமிழ் சினிமாவில் தற்போது வரை விவாகரத்து பெற்ற பிரபலங்களைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்ளலாம். ஜிவி பிரகாஷ்…

2 mins ago

கோவில் கோவிலாக சுற்றி வரும் நயன்தாரா-விக்கி தம்பதி.. இப்ப எந்த ஊருக்கு போயிருக்காங்க தெரியுமா..?

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,…

45 mins ago

நடிகைகளுடன் நெருக்கம்.. ஏஆர் ரகுமான் சொல்லியும் கேட்காத ஜிவி பிரகாஷ்.. விவாகரத்து காரணத்தை கூறிய பிரபலம்..!

தமிழ் சினிமாவில் நேற்று இரவு முதலே ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருப்பது ஜிவி பிரகாஷ் சைந்தவி பிரிவு குறித்த பதிவு…

2 hours ago

35 வருடத்துக்கு அப்புறம் கமல் செய்த வேலை.. ஆண்டவர் நான் சும்மாவா..! இந்த வயசிலும் மனுஷன் மிரட்டுறாரே..!

தமிழ் சினிமாவில் ஆண்டவர் என்கின்ற செல்ல பெயரால் உலகநாயகன் என்கின்ற அந்தஸ்துடன் தற்போது வரை கலக்கி வருபவர் நடிகர் கமலஹாசன்.…

2 hours ago

அந்த மனசு இருக்கே..! தான் படித்த பள்ளிக்கு பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை அள்ளிக் கொடுத்த அப்புக்குட்டி.. குவியும் பாராட்டு..!

நகைச்சுவை நடிகரான அப்பு குட்டி தான் படித்த பள்ளிக்கு 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வாங்கி கொடுத்து உதவி செய்திருக்கின்றார்.…

3 hours ago

அவரால குழந்தை பெத்துக்க முடியாது.. முதல் வருடத்தில் இருந்து நான் தான் டைவர்ஸ் கேட்டேன்.. ஒரே போடா போட்ட பாடகி சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வந்த சுசித்ரா. சமீபத்திய பேட்டி ஒன்றில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு தமிழ்…

4 hours ago