தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா அளவில் முக்கியமான நடிகராக இருப்பவர்தான் பகத் பாசில். சில வருடங்களாக சந்தேகமே இல்லாமல் தென்னிந்திய அளவில் இயக்குனர்களாலும் தயாரிப்பாளர்களாலும் அவ்வளவு ஏன் ரசிகர்களாலும் மிகவும் தேடப்படும் ஒரு நடிகராகவே மாறிவிட்டார். இவர் வில்லனாக நடித்தாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தாலும் கூட இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதே சமயம் தனக்கென்று இவர் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு போன் எதையும் பயன்படுத்துவதில்லை என்ற தகவலை பிரபல மலையாள நடிகர் வினய் போர்ட் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பிரேமம் படத்தில் சாய் பல்லவியை ஒருதலையாக காதலிக்கும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் வினய்.
தற்போது விரைவில் வெளியாக இருக்கும் பகத் பாசில் நடித்துள்ள ஓடும் குதிரை சாதும் குதிரை என்ற படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பகத் பாசில் பற்றி ஆச்சரியத்துடன் கூறும்போது, அவர் மிகவும் பேசிக்கான லெவலில் ஒரு செல்போனை பயன்படுத்துகின்றார். அவரிடம் ஆண்ட்ராய்டு போன் எதுவும் கிடையாது. அதே சமயம் இன்ஸ்டாகிராமில் பகத் பாசிலுக்கு எந்த அக்கவுண்டும் இல்லை. என்னை போன்றவர்கள் பெரும்பாலான நேரத்தை இன்ஸ்டாகிராமில் செலவழிக்கிறோம். ஆனால் அப்படி ஸ்மார்ட்போன் கூட இல்லாத பகத் பாசிலை தேடி எப்படி இந்திய அளவில் பல வாய்ப்புகள் வருகின்றன. அவரை மற்றவர்கள் எப்படி தொடர்பு கொள்கிறார்கள் என்பதெல்லாம் எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாட் தாலுகாவின் மெட்பூர் கிராமத்தில், வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததற்காக 21…
மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள படாரியா சாண்டா கிராமத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜேந்திர…