தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். சினிமா மட்டுமல்லாமல் உலக அளவில் புகழ்பெற்ற நடிகர்களின் ஒருவராக மாறியுள்ளார். இவருடைய நடிப்பில் அடுத்ததாக குபேரா திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் தனுஷ் உடன் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் வருகின்ற ஜூன் இருபதாம் தேதி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இட்லி கடை உள்ளிட்ட படங்களில் தனுஷ் நடித்து வருகின்றார். இப்படியான நிலையில் தனுஷ் தொடர்ந்து நான்கு வருடங்கள் தோல்வியே இல்லாமல் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அதாவது பொல்லாதவன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி பெற்றுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பொல்லாதவன்:
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பொல்லாதவன். இந்தத் திரைப்படத்தில் தனுஷ் உடன் திவ்யா ஸ்பந்தனா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணா சொல்லிட்டோர் நடித்திருந்த நிலையில் 10 கோடி ரூபாய் வசூலித்த இந்த படம் 4 விஜய் விருதுகளை பெற்றது.
யாரடி நீ மோகினி:
தனுஷ் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் யாரடி நீ மோகினி. இந்த திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். ஜவஹர் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த நிலையில் படம் சூப்பர் ஹிட் அடித்தது.
படிக்காதவன்:
அதற்கு அடுத்த ஆண்டு 2009இல் தமிழில் வெளியான அதிரடியும் நகைச்சுவையும் கலந்த திரைப்படம் தான் படிக்காதவன். இந்த திரைப்படத்தை சுராஜ் எழுதி இயக்கிய நிலையில் தனுஷ், தமன்னா, பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பொங்கல் பண்டிகையில் வெளியான இந்த திரைப்படம் 35 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது.
குட்டி:
ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிப்பில் வெளிவந்த இந்த திரைப்படத்தை மித்திரன் ஜவகர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக ஸ்ரேயா சரண் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் இலசுகள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது.
உத்தமபுத்திரன்:
கடந்த 2010 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் உத்தமபுத்திரன். இந்தப் படத்தை மித்திரன் ஜவஹர் இயக்கி இருந்த நிலையில் ஜெனிலியா தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களுக்கும் விஜய் ஆண்டனி தான் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்தது.
இதையெல்லாம் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டில் மட்டும் தனுஷ் தொடர்ந்து நான்கு படங்களில் நடித்தார். அதாவது ஆடுகளம், மாப்பிள்ளை, வேங்கை மற்றும் மயக்கம் என்ன என ஒரே வருடத்தில் தனுஷ் நடித்த நான்கு திரைப்படங்களுமே வெற்றி படங்களாக அமைந்தது. அதில் தனுஷ் கேமியோ ரோலில் நடித்த சீரன் திரைப்படம் மட்டும் தோல்வி படமாக அமைந்துவிட்டது.
நடிகர் தனுஷ் தனது பிறந்தநாள் விழாவில் ரசிகர்களைச் சந்தித்து உரையாற்றியபோது, "நாம் அடுத்த இடத்திற்குச் செல்ல வேண்டும், மக்கள் பணியாற்றுங்கள்,…
தமிழகத்தில் குடிநீர் ஆதாரங்களில் மனிதக் கழிவுகள் கலக்கப்படும் கொடூரச் செயல்கள் தொடர்வது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் விடுக்கப்பட்ட தலைகுனிவாகும். கடந்த ஆண்டு…
சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், 'நவீன மனிதர்கள்' அமைப்பின் தலைவர் பாரதி சுப்பராயன் தலைமையில் அதன்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், திருமணத் திற்குப் புறம்பான உறவுச் சந்தேகத்தின் பெயரில் கணவனே தனது மனைவியையும் அவரது ஆண்…
கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அசாமிலிருந்து நடனக் குழுவினருடன் விசாகப்பட்டினம் சென்ற குவாஹாட்டி பி. பருவா கல்லூரி மாணவி ஹிமாஸ்ரீ…
தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை செயலாளராகப் பணியாற்றி வரும் நாஞ்சில் சம்பத் குறித்து சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பல்வேறு…