#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தனது தந்தை இயக்கிய ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், காதல் கொண்டேன், திருடா திருடா என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தார். இடையில் ஒரு சில தோல்வி படங்களை கொடுத்தாலும் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், போன்ற படங்களின் மூலம் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தினார் தனுஷ்.
ஆடுகளம், அசுரன் உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை தனுஷ் வென்றுள்ளார். சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படமும் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்பொழுது தனது 50 வது பட பணிகளில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
இத்திரைப்படத்திற்கு ‘ ராயன்’ என பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தை தனுஷே இயக்கி, நடித்து வருகிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் ராயன் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், செல்வராகவன், எஸ்.ஜே. சூர்யா போன்ற முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழர் புத்தாண்டான இன்று நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது ராயன் திரைப்படத்தின் first single விரைவில் ரிலீஸாக உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனை தனுஷ் ரசிகர்கள் தற்பொழுது கொண்டாடி வருகின்றனர். இதோ அந்த பதிவு…
தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் அதிரடியான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த…
பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, "சாமானியன்" என்ற புதிய முகமூடியோடு தன் அரசியல் பயணத்தைத் தனித்துப் பிரகடனப்படுத்தியுள்ளார் அண்ணாமலை. டெல்லி…
திரைப்படங்களில் வருவது போல, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று…
தமிழக அரசியல் களம் மீண்டும் ஒரு அதிரடித் திருப்பத்தைக் கண்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களும்,…
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து விலகி, சாமானிய மக்களுக்கான புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ள நிலையில்,…
சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ லட்சுமணன், தேர்தலுக்கு முன்பாக…