#image_title
பிரபல வில்லன் நடிகரான டேனியல் பாலாஜிக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொட்டிவாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் புரசைவாக்கத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
இவர் மறைந்த நடிகர் முரளியின் உடன்பிறவா சகோதரர் ஆவார். கடந்த 2002-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் டேனியல் பாலாஜி திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு காக்க காக்க, பைரவா, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் சிறப்பாக நடித்தார்.
டேனியல் பாலாஜியின் உடல் ஓட்டேரி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் பைரவா படத்தின் இயக்குனர் நீண்ட முடிவுடன் மிரட்டி வந்த டேனியல் பாலாஜியை படத்தில் மொட்டை அடித்து நடிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதனை கேட்டவுடன் தளபதி விஜய் அதெல்லாம் வேண்டாம். நீங்கள் மொட்டையடித்த நடித்தால் மற்ற படங்கள் பாதிக்க வாய்ப்பு உள்ளது எனக் கூறியுள்ளார்.
கடைசி நாளில் கூட அதெல்லாம் முடியாது என இயக்குனரிடம் சொல்லிடுங்க என தளபதி விஜய் கூறியுள்ளார். ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு மொட்டை அடித்தால் தான் சரியாக இருக்கும் என இயக்குனர் நினைத்தாராம். இதனால் விஜய் கூறியதை கூட கேட்காமல் டேனியல் பாலாஜி மொட்டையடித்து நடித்துள்ளார். இதனை அவரே ஒரு இன்டர்வியூவில் கூறியுள்ளார்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…