தமிழில் கமர்சியல் திரைப்படங்களை தவிர்த்து சில சவாலான கதைகளை தேர்ந்தெடுத்து பலதரப்பட்ட வித்தியாசமான படங்களை கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு சில நடிகர்களில் முக்கியமானவர் தான் பரத். திருச்சியை பூர்விகமாகக் கொண்ட பரத் சினிமா மீது இருந்த ஆசையால் சென்னைக்கு வந்தார். பிறகு 2003 ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் மூலம் தான் பரத் முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது முதல் அறிமுகத்திலேயே நமக்கு மிகவும் பரிச்சயமான பரத், விஷால் அறிமுகமான செல்லமே திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டி இருந்தார்.
இவ்வாறு ஆரம்பத்திலேயே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து வந்த பாரத் இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த கதாநாயகனாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு இவர் தேர்ந்தெடுத்த வெயில், சேவல் உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு ஒரு நல்ல கதாநாயகன் என்ற அந்தஸ்தை பெற்று தந்தது.
ஆனால் நேபாளி திரைப்படத்தில் மிகவும் ஆபாசமாக இவர் நடித்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததால் ஒரு ஆக்சன் ஹீரோவாக வேண்டும் என்று முடிவெடுத்து பரத் பழனி மற்றும் திருத்தணி ஆகிய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். ஆனால் அந்த திரைப்படங்கள் தோல்வியை தழுவியதால் தனக்கு வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று நினைத்து பல திரைப்படங்களில் நடித்தார். கடந்த 20 ஆண்டுகளில் 50 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள பரத் ஒரு வெற்றி படத்திற்காக தற்போது வரை ஏங்கிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் பரத் சமீபத்தில் அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், சினிமாவுல 21 வருஷமா தினம் தினம் போராடிக்கிட்டு தான் இருக்கேன். தோல்வி என்பது வெற்றி கூட சேர்ந்து தான் வரும். எனக்குள்ள ஒரு தப்பான எண்ணம் இருந்துச்சு. அதாவது நாம என்ன படம் பண்ணாலும் ஓடிடும் என நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா அது தப்புன்னு அப்புறம் தான் எனக்கு புரிஞ்சுச்சு. சினிமா என்பது ஒரு ரேஸ் மாதிரி எந்த குதிரை வேகமாக ஓடுதோ அது மேல தான் பணம் கட்டுவாங்க. அது மாதிரி தான் சினிமாவும். ஒரு டைம் நான் காமெடி படத்தை ட்ரை பண்ணி பார்த்தேன்.
அப்போ எனக்கு சுத்தமா காமெடி செட்டாகல காமெடி இல்லாத படமா நீ தேர்ந்தெடுப்பது நல்லது என எனக்கு அட்வைஸ் பண்ணாங்க. நானும் அந்த படத்தை போட்டு பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது எனக்கு சுத்தமா காமெடி செட்டாகவில்லை என்று. ஆனால் இருக்கிறதிலேயே கஷ்டம் காமெடி தான். மக்கள் இப்போ நல்லா தெளிவாயிட்டாங்க ஒரு நல்ல கதை இருந்தா மட்டும் தான் அந்த படத்தை பார்க்கிறார்கள். எனக்கு ஆரம்பத்தில் புட்பால் மீது மிகுந்த விருப்பம் இருந்தது. நான் ஒரு கோல்டு கீப்பர். ஃபுட்பாலில் எப்படியாவது சாதித்து இங்கிலாந்தில் போய் செட்டில் ஆக வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாக இருந்தது. ஆனால் அப்படியே டிராக் மாறி சினிமாவுக்கு வந்துட்டேன் என்று உருக்கமாக பேசியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…
லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…
பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…