Categories: சினிமா

மேடையில் நடிகர் பாலகிருஷ்ணா செய்த வேலை.. பதறிப்போன நடிகை அஞ்சலி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

Spread the love

‘கேங்க் ஆப் கோதாவரி’ என்ற படத்தின் நிகழ்ச்சியின் போது நடிகர் பாலகிருஷ்ணா மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்டு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் பாலகிருஷ்ணா. 63 வயதை தாண்டிய போதிலும் தற்போது வரை ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார்.

இவரது படங்களில் பெரும்பாலும் லாஜிக் என்பதை இருக்காது. அதனையும் தெலுங்கு ரசிகர்கள் ரசிப்பதால் இவரது பாடம் எப்போதுமே நல்ல வரவேற்பை கொடுக்கும். அதிலும் ஒற்றை விரலால் ரயிலை நிறுத்துவது, காரை எட்டி உதைத்து அனுப்புவது போன்ற அட்ராசிட்டிகளை செய்து பிரபலமாகி இருக்கிறார் பாலகிருஷ்ணா. இதன் காரணமாக இவர் நடிக்கும் படங்கள் பல ட்ரோல்களில் இருக்கும்.

இப்படி ஒரு புறம் இருக்க அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்குவது இவரது வழக்கம். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுசித்ரா பாலகிருஷ்ணா படத்தில் நடித்த போதுதான் தனக்கு பாலியல் சீண்டல் நடந்ததாக ஓப்பனாகவே பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருப்பார். இதனை பார்த்த பலரும் இவர்தான் அவரா என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் தற்போது கேங்க் ஆப் கோதாவரி என்கின்ற திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் பாலகிருஷ்ணா கலந்து கொண்டார். இந்த படத்தில் அஞ்சலி, நாசர், நேஹா ஷெட்டி, விஸ்வாக் சென் ஆகிய பல நடிகர்கள் நடித்திருக்கின்றார்கள். இந்த விழாவின்போது மேடையில் ஏறிய பாலகிருஷ்ணா அங்கு நின்று கொண்டிருந்த அஞ்சலி நேகா ஷெட்டி இருவரையும் தள்ளி நிற்கச் சொல்லி கூறினார்.

ஆனால் அதை கவனிக்காமல் நேகா செட்டியும், அஞ்சலியும் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென்று அஞ்சலியை பிடித்து தள்ளிவிட்டுவிட்டார். ஒரு நிமிடம் தடுமாறிய அஞ்சலி பின்னர் சுதாகரித்து நிலையாக நின்றார். அவர் செய்ததை பார்த்த பலரும் ஷாக்காகினாலும் அஞ்சலி சிரித்துக் கொண்டுதான் இருந்தார்.

இருந்தாலும் பொது நிகழ்ச்சியில் இப்படி நடந்து கொள்வது மிகவும் அநாகரீகமான விஷயம் என்று பலரும் கூறி வருகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த பலரும் பாலகிருஷ்ணாவின் இந்த செயலை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். நடிகை அஞ்சலி இதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் அவர் செய்தது மிகவும் தவறான செயல் என்று ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

5 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

5 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

6 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

6 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

6 மணத்தியாலங்கள் ago