Categories: சினிமா

இந்த சிறு வயது புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகரின் மகன் யாருன்னு உங்களுக்கு தெரியுதா?.. இவர் தான் இன்று ஹீரோ..!

Spread the love

90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவையே அலறவிட்ட பிரபலமான நடிகர் தான் முரளி. இவருடைய மூத்த மகன் அதர்வா முரளி தன்னுடைய 21 வயதில் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற திரைப்படம் மூலமாக தான் இவர் ஹீரோவாக அறிமுகமானார். இவருடைய முதல் படம் வெளியான சிறிது நாட்களிலேயே அவருடைய தந்தை முரளி காலமானார். இருந்தாலும் துவண்டு போகாத அதர்வா சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்தார். சினிமா துறையில் தனக்கென தனி ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வளர்த்துக் கொண்டார். முதன் முதலில் பத்ரி வெங்கடேஷ் இயக்கிய பானா காத்தாடி என்ற காதல் நாடகத்தில் அதர்வா பள்ளி மாணவனாக நடித்திருந்தார்.

இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல் விமர்சனங்கள் மற்றும் பல பிரபலங்களின் பாராட்டுகளையும் பெற்றது. அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது படத்தில் நேரடியான சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞராக நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் காதலும் பல திருப்பங்களும் நிறைந்து இருந்தது.

இந்த படம் நூறு நாட்கள் வெற்றிகரமாக திரையில் ஓடிய நிலையில் படத்தில் அதர்வாவின் நடிப்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. தொடர்ந்து பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தில் ஒரு அப்பாவியாக அடிமை வேடத்தில் அதர்வா நடித்திருந்தார். தன்னுடைய அழகான தோற்றத்தை படத்தின் கதாபாத்திரத்திற்காக அடியோடு மாற்றிக் கொண்டார். இன்னும் சொல்லப்போனால் இந்த திரைப்படம் தான் அதர்வாவின் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்று சொல்ல வேண்டும். இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றார்.

இதனைத் தொடர்ந்து ஈட்டி திரைப்படத்தில் ஒரு தடகள வீரராக நடித்து ரசிகர்களை கவர்ந்த அதர்வா 100 என்ற அதிரடி திரைப்படத்தில் ஆக்சன் ஹீரோவாக கலக்கியிருந்தார். இதனைத் தவிர இரும்பு குதிரை, சண்டிவீரன், இமைக்கா நொடிகள், குருதி ஆட்டம் என ஏராளமான திரைப்படங்களில் அதர்வா நடித்துள்ளார். இறுதியாக இவர் டி என் ஏ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இவர் பிஸியாக நடித்து வருகின்றார். இப்படியான நிலையில் அதர்வா தான் தற்போது குழந்தை பருவ போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். தனது அம்மாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல தான் அந்த போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

10 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

10 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

10 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

11 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

11 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

11 மணத்தியாலங்கள் ago