Categories: சினிமா

நடிப்பை தாண்டி அந்த பிசினஸில் கல்லா கட்டும் ஆர்யா… மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா…?

Spread the love

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் 2005 இல் வெளியான ‘அறிந்தும் அறியாமலும்” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஆர்யா. இதைத்தொடர்ந்து பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து இவர் தற்பொழுது தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

இவர் நடிப்பில் வெளிவந்த பாஸ் என்கிற பாஸ்கரன், மதராசபட்டினம், நான் கடவுள்,ராஜா ராணி,சார்பட்டா பரம்பரை , எனிமி, காதர் பாட்சா போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் ஆர்யா நடிகை சாயிஷாவின் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் ‘கஜினிகாந்த்’ என்னும் திரைப்படத்தில் ஒன்றாக நடித்த போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது.

இதைத் தொடர்ந்து இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியினருக்கு தற்பொழுது ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் தங்கள் குழந்தைக்கு ஆரியானா என்று பெயர் சூட்டியுள்ளனர். படங்களில் நடிப்பதை தாண்டி தயாரிப்பு நிறுவனம், Zaitoon மற்றும் சென்னை அடையாறில் Sea shell என சொந்த உணவகம்  என பல தொழில்களையும் கைவசம் வைத்துள்ளார் நடிகர் ஆர்யா.

இந்நிலையில் படத்திற்காக  7 கோடி முதல் 14 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்குகிறார்.  இதுமட்டுமின்றி நடிகர் ஆர்யாவிற்கு அண்ணா நகரில் நீச்சல் குளத்துடன் கூடிய பிரம்மாண்டமான சொகுசு வீடு ஒன்றும் உள்ளது. மேலும் பல லட்சங்கள் மதிப்பிலான மினி கூப்பர், ஆடி, பென்ஸ் என பலவகையான சொகுசு கார்களையும்  வாங்கி வைத்துள்ளாராம். தற்பொழுது நடிகர் ஆர்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இவரின் சொத்து மதிப்பு சுமார் 80 கோடி வரை இருக்கலாம் என்றும்  கூறப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

4 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

4 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

5 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

5 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

5 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

5 மணத்தியாலங்கள் ago