Categories: சினிமா

‘அந்த பாம்பு புதுக்குள்ள கைவிட்டிங்களே’ புகழ் அனுமோகன் இயக்கிய திரைப்படங்களா இவை..?

Spread the love

தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலம் ஆனவர் அனுமோகன். குறிப்பாக கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படையப்பா திரைப்படத்தில் அவர் நடித்திருந்த கதாபாத்திரம் மிகவும் ரசிக்கப்பட்டது. அந்த படத்தில் கொங்கு தமிழில் பேசிய வசனம் வெகுவாக சிலாகிக்கப்பட்டது.

அந்த படத்தின் வெற்றிக் காரணமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் பல படங்களில் நடித்தார். அவர் நடித்ததில் குறிப்பிடத்தகுந்த படங்களாக நட்புக்காக, படையப்பா, மின்சார கண்ணா, ஏழையின் சிரிப்பில், சபாஷ், பத்ரி, ஒற்றன் ஆகிய படங்களை சொல்லலாம். கடைசியாக ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் அனுமோகன் வெறும் நடிகர் மட்டுமில்லை. அவர் கதாசிரியராகவும், இயக்குனராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார். இயக்குனர் சுந்தர் ராஜனின் நண்பரான அனுமோகன், அவரின் படங்களில் இணை இயக்குனராக பணியாற்றினார்.

அதன் பின்னர் 1989 ஆம் ஆண்டு வெளியான மோகன், ரேகா, அமலா ஆகியோர் நடித்த இதுஒரு தொடர் கதை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் முரளி, பிரபு நடித்த நினைவுச்சின்னம் படத்தை இயக்கினார். இந்த படம் வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்து அர்ஜுன் நடிப்பில் மேட்டுப்பட்டி மிராசு மற்றும் ராமராஜன் நடித்த அண்ணன் திரைப்படத்தையும் இயக்கினார். இந்த படங்கள் பெரிய வெற்றி பெறாததால் அவரால் அடுத்தடுத்து இயக்குனர் ஆக பணியாற்ற முடியவில்லை.

இதுமட்டுமின்றி சத்யராஜ் நடித்த பங்காளி படத்துக்கு கதாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் பிரம்மாண்டமான ஒரு சீரியல் ஒன்றை உருவாக்கும் முனைப்பில் இருப்பதாகவும் விரைவில் அதன் மூலம் கம்பேக் கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

8 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

8 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

8 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

8 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

9 மணத்தியாலங்கள் ago