அஞ்சாதே திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகர் அஜ்மல். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து திரு திரு துறு துறு, கோ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். இவர் ஹீரோவாகவும், கேரக்டர் ஆர்டிஸ்ட் மற்றும் வில்லன் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
குறிப்பாக நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் விரல வைத்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என பல தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். இதனிடையே விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோட் திரைப்படத்திலும் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இடையில் சினிமாவில் இருந்து காணாமல் போனதற்கான காரணம் என்ன என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், நான் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே நேரத்தில் இந்த மூன்றிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அது மட்டுமல்லாமல் நான் ஒரு மருத்துவர் என்பதால் சில காலம் வெளிநாட்டில் படிக்கச் சென்று விட்டேன். இதனால் சரியாக சினிமாவில் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் தற்போது முழுக்க முழுக்க சினிமாவில் நடிக்க உள்ளேன். எனக்கு இந்த மூன்று மொழிகளிலும் அதிக அளவிலான ரசிகர்கள் இருப்பதால் அவர்களை திருப்தி படுத்த நான் சினிமாவில் முழு கவனம் செலுத்த உள்ளேன் என்று அஜ்மல் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…