#image_title
நடிகர் அஜித் அடுத்ததாக கே ஜி எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நில்-ன் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது மகிழ்த்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கின்றார். மேலும் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா படத்தில் நடித்திருக்கின்றார்.
ஹாலிவுட் தரத்தில் ஒரு ஆக்சன் படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வழக்கமாக மகிழ்த்திருமேனி திரைப்படங்கள் என்றாலே அதில் ஆக்ஷன் திரில்லர் இருக்கும். இவர் இயக்கிய தடையறத் தாக்க, தடம் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் விடாமுயற்சி திரைப்படமும் அப்படி ஒரு சிறந்த படமாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்ததை தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. தீபாவளியை முன்னிட்டு இப்படத்தை வெளியிடப்பட குழுவினர் தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து சன் பிக்சர் தயாரிப்பில் அஜித் தனது 64வது திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. இதற்கு அடுத்ததாக அவரின் 65 ஆவது திரைப்படம் குறித்த ஒரு தகவல் தான் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.
அஜித் சிவாவின் இயக்கத்தில் நடித்து முடித்த கையோடு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. கேஜிஎஃப் திரைப்படத்தின் மூன்றாவது பகுதிக்கான லீடாக வைத்து ஒரு திரைப்படத்தை பிரசாந்து நில் இயக்கப் போவதாகவும் அதில் நடிகர் அஜித் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த செய்தி அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியிருக்கின்றது. விரைவில் இந்த கூட்டணி பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…
லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…
பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…