நடிகர் அஜீத்குமார் கடந்த சில மாதங்களாக துபாயில் இருந்துவிட்டு சமீபத்தில் தான் சென்னை திரும்பினார். துபாயில் நடந்த கார் ரேஸில் கலந்துக்கொண்ட அஜீத்குமாருடன், ஓய்வு நேரத்தில் தனியாக காரில் பயணிக்க ஒரு நபருக்கு 3500 திராம் வரை அந்த கார் ரேஸ் நடத்தும் நிறுவனம் கட்டணம் நிர்ணயித்து வசூலித்தது. இதற்காக ஒரு ரவுண்டுக்கு 1.5 நிமிடம் வீதம் 2 ரவுண்டு 3 நிமிடங்கள் அஜீத்குமாருடன் பயணிக்க அவர்களுக்கு அனுமதி தரப்பட்டது.
அந்த வகையில் இதற்காக 40 பேர் வரை கட்டணம் செலுத்திய நிலையில் 20 பேர் வரை அஜீத்குமாருடன் தனியாக காரில் பயணித்துள்ளனர். மீதி 20 பேர் நேரமின்மை காரணமாக பயணிக்கவில்லை. இதற்காக சமீபத்தில் துபாய் புறப்பட்டுச் சென்ற அஜீத்குமார், அந்த 20 பேருடன் தனித்தனியாக 3 நிமிடங்கள் வீதம் காரில் அவர்களை அழைத்துச் சென்றுள்ளார். அந்த ரசிகர்கள், குறிப்பிட்ட வெப்சைட்டில் சென்று அஜீத்குமாருடன் பயணித்த தங்களது வீடியோக்களை டவுன்லோடு செய்துக்கொள்ள அந்த ரேஸ் நடத்தும் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், சந்தியா ஷர்மா (28) என்ற ஆசிரியை வகுப்பறையில் பாடம்…
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம் பகுதியில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் முன்னாள் மனைவி ஆர்த்தி தனது…
வியட்நாமில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், பெண் ஒருவருக்கு இருசக்கர வாகனத்திலேயே குழந்தை பிறந்த அதிர்ஷ்டகரமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.…
ஜார்ட் கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்ற அரசுப் பணி நியமனத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தில், பெண் மாணவி ஒருவர்…
சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், பர்கர் கிங் உணவக ஊழியர் ஒருவர் வாடிக்கையாளருக்கு குடிநீர் வழங்க மறுத்து, அவரிடம் கடுமையாகப்…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் ஜெய்பூரியா ஷோப்பிங் மாலுக்குள் இளைஞர் ஒருவர், பெண்ணைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ…