தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இதனை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இதனிடையே பாசில் இயக்கத்தில் கடந்த 1998 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் காதலுக்கு மரியாதை. இது திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஷாலினி நடித்திருந்த நிலையில் சிவக்குமார், ஸ்ரீ வித்யா மற்றும் ராதாரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்றுவரை விஜயின் திரை வாழ்க்கையில் இந்த திரைப்படம் முக்கியமான படங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. குறிப்பாக தளபதி விஜய் வெற்றி நாயகன் என்ற பெயர் எடுத்துக் கொடுத்த திரைப்படங்களில் காதலுக்கு மரியாதை திரைப்படம் ஒன்று. இந்நிலையில் காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் முதல் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது விஜய் கிடையாது என்ற ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது 90களில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்த நடிகர் அப்பாஸ் தான் முதன் முதலில் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்துள்ளார். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போக அவருக்கு பதிலாக விஜய் ஹீரோவாக நடித்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உரையாற்றியபோது, டாஸ்மாக்கில்…
"நம் ஆட்சிக்கு நாள் குறிப்பவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்" என்று முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். சட்டப்பேரவையில்…