CINEMA
‘குக் வித் கோமாளி’ போட்டியாளர் விசித்ராவின் குடும்பத்தை பார்த்து உள்ளீர்களா?… என்ன ஒரு அழகான குடும்பம் புகைப்படம்…
90s களில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் விசித்ரா.ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
இவர் அப்பா வில்லியம்ஸ் . இவர் தந்தை ஆல் இந்தியா ரேடியோவில் வேலை செய்பவர். இவருக்கு இரு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரரும் உள்ளார்.
விசித்ரா படிக்கும்போதே திரைத்துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் படிப்பை தொடர முடியவில்லை.
அதன் பின் தபால் முறை படிப்பின் மூலமாக பி ஏ சைக்காலஜி ,எம் எஸ் சி சைக்கோ தெரபி கவுன்சிலிங் போன்ற படிப்புகளை படித்துள்ளார்.
1992 ஆம் ஆண்டு வெளியான ‘சின்ன தாயே’ என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழில் தலைவாசல் ,தேவர் மகன், எங்கள் முரளி, ரசிகன், ஆத்மா, வீரா, முத்து, வில்லாதி வில்லன், அசுரன், பெரிய குடும்பம் ,எட்டுப்பட்டி ராசா ,போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.
இவர் கவர்ச்சி நடிகையாகவும் நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் நடித்து மிகவும் பிரபலமடைந்தார். இவர் ரஜினிகாந்த் நடித்த முத்து படத்தில் வடிவேலுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.
இவர் சினிமா நடிப்பை தாண்டி சீரியலும் நடித்துள்ளார். மாமி சின்ன மாமி ,வாழ்க்கை ,ராசாத்தி என்ற சீரியலும்’ கீதா கோவிந்தம்’ தெலுங்கு சீரியலிலும் நடித்துள்ளார்.
இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார்.
நடிகை விசித்ரா ஷாஜி என்பவரை2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
வில்லாதி வில்லன்’ படத்திற்குப் பிறகு திருமணம் செய்து கொண்ட விசித்ரா. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் இருந்து விலகினார்.
ஒரு காலகட்டத்தில் சினிமா வாய்ப்பு குறையும் போதும் முழுமையாக சினிமாவை விட்டு விலகிக் கொண்டார்.
பல வருடங்களுக்குப் பிறகு 2019 ஆம் ஆண்டு ‘ராசாத்தி’ என்ற சீரியல் மூலமாக திரையுலகில் மீண்டும் re entry கொடுத்துள்ளார்.
தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோ ‘குக் வித் கோமாளியில்’ போட்டியாளராக உள்ளார்.
தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.