லியோ படைத்த புதிய சாதனை – தமிழ்நாட்டில் இதுதான் முதல்முறையாமே? – என்னதான் இருந்தாலும் விஜய் லெவலே வேறதான்

By Sumathi

Updated on:

விஜய் நடித்த லியோ படம், கடந்த மாதம் 19ம் தேதி வெளியானது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம், துவக்கம் முதலே பல சாதனைகளை செய்தது. லியோ டிரெய்லர், 46 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில், விஜய் முந்தைய படமான மாஸ்டர் படத்தின் பார்வையாளர் எண்ணிக்கை 28 மில்லியனை கடந்து 30 மில்லியனை தொட்டது. அதாவது விஜய் படத்தின் சாதனையை விஜய் படமே முறியடித்தது.

 Actor Vijay

   

லியோ படம் ரிலீஸ் ஆன அன்றே, 148.5 கோடி வசூல் என்ற சாதனையை படைத்தது. அதற்கு முன்பாக, ப்ரீ டிக்கெட் புக்கிங் செய்யப்பட்ட வகையில், ரூ. 15 கோடி ரூபாய் வசூலித்து அதுவும் பெரிய சாதனையாக இருந்தது. இத்துடன், அமெரிக்காவில் வெளியிடப்பட்ட இந்த படம், 5 மில்லியன் டாலர்களை கடந்தும் வசூல் சாதனை புரிந்தது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ. 41.50 கோடி வரை அமெரிக்காவில் விஜய் வசூலித்தது, மிகப்பெரிய சாதனை கூறப்படுகிறது.

 Actor Vijay

மேலும் லியோ படம், ரிலீஸ் ஆன 12 நாட்களில் மொத்த வசூல் 540 கோடி ரூபாயை கடந்திருப்பதும் சாதனை என்றே கூறப்படுகிறது. இப்போது மற்றொரு புதிய சாதனையாக, தமிழகத்தில் முதன்முறையாக லியோ படத்தின் விநியோகஸ்தர்கள் தரப்பில் 100 கோடி ரூபாய் ஷேர் தரப்பட்டுள்ளது. ஒரு படத்தின் ஷேர் 100 கோடி ரூபாய் என்பது, லியோ படத்துக்காக மட்டுமே முதன்முறையாக தரப்பட்டுள்ளது. இதற்கு முன் பொன்னியின் செல்வன் படத்துக்கு ரூ. 97 கோடி, ஜெயிலர் படத்துக்கு ரூ.92 கோடி மட்டுமே தரப்பட்டுள்ளது. 100 கோடி ரூபாய் என்ற சாதனையை லியோ சாதித்து காட்டியுள்ளது.

author avatar
Sumathi