சாலை விதிகளை கடைபிடிப்பது என்பது முக்கியமானது. ஏனெனில் அன்றாடம் சாலை விபத்துக்கள் ஏதாவது ஒன்று நடந்து கொண்டே தான் இருக்கிறது. சாலையில் செல்பவர்களுடைய பாதுகாப்பையும் கவனிக்காமல் ஒரு சிலர் செய்யும் செயலால் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது ஒரு சம்பவம் வைரலாகி வருகிறது. அதாவது ஒருவரின் கவனக்குறைவால் ஏற்பட்ட இந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. சாலையின் ஓரமாக ஒரு கார் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் இருந்த நபர் இடது மற்றும் வலது பக்கத்தை பார்க்காமல் திடீரென்று கதவை திறக்கிறார்.
அப்பொழுது அதே நேரத்தில் சைக்கிளில் வந்த ஒருவர் அந்த கார் கதவு திறந்ததால் அதில் மோதி சாலையில் தவழ்ந்து தவறி விழுகிறார். அந்த சமயத்தில் பின்னால் வேகமாக வந்த கார் அவர் மீது மோதி உள்ளது. இதனால் பயங்கரமாக அந்த நபர் பாதிக்கப்பட்டுள்ளார். பிறகு அந்த சைக்கிளில் மோதிய கார் ஓட்டுநர் தப்பி ஓடி உள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது. இதனையடுத்து இந்த வீடியோ பார்த்த அனைவரும் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். கார் கதவை திறப்பதற்கு முன்பாக இடது மற்றும் வலது பக்கங்களில் பாதசாரிகள், இருசக்கர வாகனங்கள் வருகிறார்களா என்பதை கவனிக்க வேண்டும். அந்த சிறிய கவனக்குறைவால் இன்னொருவருக்கு உயிரிழப்பு ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள்.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…