தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முக திறமை கொண்ட எம்ஜிஆர் வாள் சண்டை உள்ளிட்ட வீர விளையாட்டுகளிலும் முறையாக பயிற்சி பெற்றவர். நாடக நடிகராக இருந்த திரையுலகில் துணை நடிகராக அறிமுகமாகி பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் தன்னை ஒரு நாயகனாக நிறைவேற்றினார். பல வெற்றி திரைப்படங்களில் நடித்த எம் ஜி ஆர் ஒரு கட்டத்தில் இயக்குனராகவும் மாறினார். இவர் இயக்கத்தில் வெளியான முதல் படமான நாடோடி மன்னன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து அரசியலிலும் ஈடுபட்டு வந்த எம்ஜிஆர் 1970 களில் அதிமுக கட்சியை தொடங்கினார்.
அப்போது உலகம் முழுவதும் சிறந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று முடிவு செய்து அதற்கு ஏற்றது போல ஒரு கதை தேவை என்று தேடிக் கொண்டிருந்த எம்ஜிஆர்க்கு உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் கதை கிடைத்துள்ளது. இந்த திரைப்படத்தை படமாக பல தடைகள் வந்தாலும் மனம் தளராத எம்ஜிஆர் படப்பிடிப்பு நடத்தை வெளிநாடுகளுக்குச் செல்ல தயாரானார். இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க குன்னக்குடி வைத்தியநாதரை புக் செய்த எம்.ஜி.ஆர் பலரும் அவர் வேண்டாம் என்று சொல்லவே எம் எஸ் விஸ்வநாதனை கேட்டுள்ளார்.
ஆனால் நாம் இரண்டாவது வாய்ப்பாகத்தான் இருக்கிறோம் என்பதை நினைத்த எம் எஸ் வி இந்த படத்திற்கு இசையமைக்க மறுத்தாலும் பிறகு எம்ஜிஆர் சமாதானப்படுத்தி அவரை படத்திற்கு இசையமைக்க வைத்துள்ளார். லொகேஷன் மட்டும் சொல்ல அதற்கு ஏற்றது போல எம் எஸ் வி இசையமைத்துள்ளார். அதன்படி இசைப்பணியை தொடங்கிய எம் எஸ் வி காலையில் டியூன் அமைக்க மதியம் எம்ஜிஆர் வந்து டியூன் கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார். அதேசமயம் எம் எஸ் வி போட்ட ட்யூன்கள் அனைத்திற்கும் எம்ஜிஆர் எந்த ஒரு ரியாக்ஷனும் கொடுக்காமல் தனக்கு பிடிக்காத மாதிரியே நடந்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்து விரக்தியான எம் எஸ் வி பத்து நாட்களில் 15 பாடல்கள் பதிவு செய்து கொடுத்துள்ளார்.
மேலும் இந்த பாடல்கள் எம்ஜிஆருக்கு திருப்தி இல்லை, அதனால் நாம் சம்பளம் வாங்கக்கூடாது என்று நினைத்துள்ளார். படம் முடிந்து வெளியீட்டிற்கு தயாரான போது விநியோகஸ்தர்களை அழைத்து ஆள் உயர மாலையை எம்எஸ்விக்கு அணிவித்த எம்ஜிஆர் ஒரு பைநிறைய பணம் கொடுத்துள்ளார். இதை எதிர்பார்க்காத எம் எஸ் வி ட்யூன் பற்றி நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லை இப்போது இப்படி செய்கிறீர்களே என்று கேட்க, நீ போட்ட அத்தனை டியூனுமே பிரமாதமாக இருந்தது. ஆனால் நான் அப்போது நல்லா இருக்கு என்று சொல்லியிருந்தால் நீ அத்துடன் விட்டிருப்பாய். இப்போது நீ அதற்கு மேல் முயற்சி செய்து சிறப்பான பாடல்களை கொடுத்துள்ளார். அதற்காகத்தான் நான் அப்படி செய்தேன் என்று எம்ஜிஆர் கூறி எம்எஸ்வி-ஐ வியக்க வைத்தார்.
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ராஜூ, கடந்த 2021-ஆம் ஆண்டு…
சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…
மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…