Categories: சினிமா

அபிஷேக் பச்சன் சைலன்டாக பார்த்த வேலை.. நோட் பண்ண நெட்டிசன்கள்.. அப்போ விவாகரத்து கன்ஃபார்மா..?

Spread the love

அபிஷேக் பச்சன் விரைவில் ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்ய உள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகின்றது.

சமீப காலமாக சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் விவாகரத்து கேட்டு பிரிந்து வருகிறார்கள். பல ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இணைந்து பயணித்த அவர்கள் சில பிரச்சனைகளால் விவாகரத்து பெற்று பிரிந்து வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் முன்னாள் உலக அழகி ஆனால் ஐஸ்வர்யா ராயும் அமிதாப்பச்சனும் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் பரவி வருகின்றது.

நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழில் 1997 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான இருவர் என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கின்றார். தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை கடந்த 2007 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக ஒரு சர்ச்சை கிளம்பியது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் அவரது மகளின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கணவர் அபிஷேக் பச்சனும், மனைவி ஐஸ்வர்யா ராயும் ஒன்றாக சேர்ந்து மகளின் நிகழ்ச்சியை கண்டு களித்தார்கள். பின்னர் ஆர்சிஸ் எனும் netflix படத்தின் பிரீமியர் நிகழ்ச்சிக்கும் ஒன்றாக சேர்ந்திருந்தார்கள்.

அதுமட்டுமில்லாமல் அம்பானி மகன் திருமணத்தில் அபிஷேக் பச்சனம் ஐஸ்வர்யா ராயும் ஒன்றாக தான் கலந்து கொண்டார்கள். ஆனால் ஐஸ்வர்யா ராய் மகளுடன் மட்டுமே புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த சில ஆண்டுகளாக மனக்கசப்பில் இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது.

மேலும் மகளுக்காக மட்டும் தான் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாக கூறி வந்தார்கள். இந்நிலையில் அபிஷேக் பச்சன் செய்த ஒரு விஷயம் தான் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகின்றது. குழந்தைகள் வளர்ந்து பெரியோர்களான பிறகு 50 வயதை கடந்த தம்பதியினர் விவாகரத்து செய்து பிரிந்து போவதற்கு பெயர் தான் ‘கிரே டைவர்ஸ்]. உலகம் முழுவதும் இது தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றது.

குழந்தைகளுக்காக சகித்துக் கொள்ளும் வாழும் தம்பதியினர் பின்னர் அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அந்த வாழ்க்கையை விட்டு வெளியில் வருவது தான் இந்த கிரே டைவர்ஸ். இது தொடர்பான இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றுக்கு அபிஷேக் பச்சன் லைக் போட்டுள்ள நிலையில் மீண்டும் இவர்களின் விவாகரத்து பஞ்சாயத்து கிளம்பி இருக்கின்றது. சமீப நாட்களாக தொடர்ந்து பல பிரபலங்கள் தங்களது விவாகரத்தை அறிவித்து வருகிறார்கள்.

அமீர்கான் சமீபத்தில் தான் தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் சொல்லவே வேண்டாம். அடுத்தடுத்து விவாகரத்து பஞ்சாயத்து தான். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் விவாகரத்து செய்தனர். இவர்கள் இருவரும் 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து விட்டு பின்னர் விவாகரத்து செய்து கொண்டனர்.

#image_title

அதை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்து இருந்தார். தற்போது ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்யப் போகிறார் என்று தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றது. இப்படி சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது மனைவிகளை விவாகரத்து செய்வது தொடர் கதையாகி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

“மேடம்… நீங்களே இப்படி பண்ணலாமா…?” விஜயதசமி கொண்டாட்டத்தில் ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட ஐபிஎஸ் அதிகாரி… வைரல் வீடியோவால் சர்ச்சை…!!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…

6 மணத்தியாலங்கள் ago

மிரண்டு ஓடி கார்களை கவிழ்த்த யானை…! சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையுடன் கூடிய அமாரி கீழே விழுந்து சேதம்… பயந்து நடுங்கிய மக்கள்… திகில் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…

6 மணத்தியாலங்கள் ago

பூனையுடன் விளையாடிய 18 மாத குழந்தை… மாடியில் இருந்து தூக்கி வீசிய சிறுவன்… தாயின் விடாமுயற்சியால் அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…

6 மணத்தியாலங்கள் ago

“யார்கிட்ட பேசுற…?” திருமணமான 6 மாதத்தில்…. மனைவியை கொன்றுவிட்டு விபத்து போல நாடகமாடிய கணவன்… விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…

7 மணத்தியாலங்கள் ago

மக்களே உஷார்!… உயிருக்கே ஆபத்தா?… 3 நாள் காய்ச்சல்… பறிபோன 24 வயது இளைஞரின் உயிர்… மருத்துவமனையில் நடந்தது என்ன?…!!

சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…

7 மணத்தியாலங்கள் ago

மனசாட்சியே இல்லையா…? வாலிபரை கட்டை, குழாயால் அடித்து வெளுத்த கும்பல்…. நடுரோட்டில் வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago