கோவாவில் மஞ்சள் நிற டி-ஷார்ட் அணிந்த ஒருவர் வேகமாகச் செல்லும் ஸ்கூட்டரில் எழுந்து நிற்கிறார்.அவருக்குப் பின்னால் கருப்பு நிற டி ஷார்ட் அணிந்த மற்றொரு நபர் அமர்ந்திருக்கிறார். இந்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இவர்களை பைக்கில் வந்த பலர் பலமுறை எச்சரித்த போதிலும், அவர்கள் எந் கவலையும் இல்லாமல் ஹெல்மெட் இல்லாமல் அதிவேகமாக பைக் ஓட்டுகிறார்கள். மற்ற பைக் ஓட்டுனர்கள் ஆபத்தை உணர்ந்து வேகத்தைக் குறைக்கச் சொல்கிறார்கள்.
பரபரப்பான சாலையில் பதிவான இந்த காட்சிகளில், ஸ்கூட்டர் அதிவேகமாக செல்லும்போது அந்த இளைஞன் ஆபத்தான சாகசத்தை செய்வதைக் காட்டுகிறது. இந்த செயல், ஸ்கூட்டர் ஓட்டுநர் மற்றும் அவரது பின்னால் அமர்ந்திருப்பவர் மட்டுமல்ல, அவர்களைச் சுற்றியுள்ள வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளையும் ஆபத்தில் ஆழ்த்தும் என்று நெட்டிசன்கள் கவலை தெரிவித்தனர். இந்த வீடியோ வெளியான பிறகு பல சமூக ஊடக பயனர்கள் கடுமையாக எதிர்வினையாற்றினர். பலர் இந்த பொறுப்பற்ற செயலை விமர்சித்தனர், சிலர் வைரலாகுவதற்காக, வாழ்க்கையுடன் விளையாட வேண்டிய அவசியமில்லை” என்று கருத்து தெரிவித்தனர்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…