திருப்பதி அருகே ஸ்ரீனிவாச மங்காபுரத்தில் தன்னுடைய பாக்கெட்டில் செல்போனுடன் ஒரு நபர் சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வேறொருவர் செல்போனை ஆட்டைய போட வேண்டும் என முடிவெடுத்துள்ளார். அந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர் தன் மோட்டார் சைக்கிளை திருப்ப முயற்சி செய்வதுபோல நாடகமாடியதோடு, வழுக்கி கீழே விழுவது போல நடித்தார். மேலும் யாராவது வந்து உதவி செய்யுங்கள்! என்று கூச்சலிட்டார்.
உடனே செல்போனுடன் சென்ற நபர், ஓடிச்சென்று அவரைக் காப்பாற்ற முயன்றார். அப்பொழுது உதவுவது போல் வந்த அவர் கூட்டாளியும், பைக் ஓட்டி வந்த நபரும் செல்போனை திருடி விட்டு ஓடி சென்றனர். பின் செல்போனுடன் வந்த நபர் தனது பாக்கெட்டில் ஏதோ வெயிட் குறைகிறதே என்று தொட்டுப் பார்க்கும் பொழுது, செல்போன் மாயமானது தெரியவந்துள்ளது. மேலும் தகவல் அறிந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர் சுபாஷ் என தெரியவந்தது. இவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…