நானொரு சல்லிப்பயல்… மனைவியின் பிறந்தநாளில் பிரபல இயக்குநர் இரா. சரவணன் வெளியிட்ட அதிரடி பதிவு…!

Spread the love

திரையுலகில் ‘கத்துக்குட்டி’, ‘உடன்பிறப்பே’, ‘நந்தன்’ ஆகிய உணர்வுப்பூர்வமான திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் இயக்குநர் இரா. சரவணன். சமூக அக்கறை கொண்ட படங்களை இயக்கிய இவர், சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் தனது மனைவி கலா குறித்து எழுதியுள்ள உருக்கமான பதிவு, வாசிப்பவர்களின் நெஞ்சைக் கலங்கச் செய்துள்ளது. ஒரு நடுத்தரக் குடும்பத்துத் தலைவனின் இயலாமையையும், மனைவியின் உடல்நலக் குறைவின்போது ஏற்படும் தவிப்பையும், பின்னர் வழக்கம் போல ஓட்டப்பந்தயமாக மாறும் மனித வாழ்க்கையையும் அவர் சுயவிமர்சனத்தோடு அதில் கொட்டியுள்ளார்.

சமீபத்தில் ஒரு நாள் இரவு, அவரது மனைவிக்கு திடீரென ஏற்பட்ட கைக் கடுப்பும், தோள்பட்டை வலியும் இதயப் பாதிப்பிற்கான அறிகுறியாக மாறியுள்ளது. நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளை வீட்டிற்குள் பூட்டிவிட்டு, மருத்துவமனைகளுக்கு அலைந்து, இறுதியில் கீழ்ப்பாக்கம் குமரன் மருத்துவமனையின் அவசரப் பிரிவில் அனுமதித்துள்ளனர். அதிகாலை நேரத்தில் ஆஞ்சியோ பரிசோதனைக்காக மனைவியின் நகைகளைக் கழற்றிக் கொடுத்த தருணத்தில் நிலைகுலைந்து போனதாகக் குறிப்பிடும் சரவணன், “அவளுக்குன்னு நான் இன்னும் ஒண்ணுமே பண்ணலடா, வாழ்க்கை முழுக்க போராட்டத்தை மட்டுமே கொடுத்திருக்கேன்” என்று தன் அக்கா மகனிடம் அழுது புலம்பியுள்ளார்.

இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, இரண்டு இடங்களில் லேசான அடைப்பு மட்டுமே உள்ளதாகவும், மருந்துகளே போதும் என்றும் மருத்துவர் கூறியபோதுதான் அவருக்கு உயிர் திரும்பியுள்ளது. அந்தத் தவிப்பில், இனிமேல் மனைவியை ஒரு சிறு குறையும் சொல்லாமல், எந்த வேலையும் செய்யவிடாமல் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மனதிற்குள் சபதம் எடுத்துள்ளார். ஆனால், அந்தப் பயமும் குற்ற உணர்ச்சியும் சில நாட்களிலேயே மறைந்து, மீண்டும் வேலைகளும், பயணங்களும் அவரை வழக்கமான இயந்திர வாழ்க்கைக்குள் இழுத்துச் சென்றுவிட்டதாக அவர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

மருத்துவமனைக்குச் சென்று ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், மனைவியின் பிறந்தநாளான அன்று அதிகாலையிலேயே எழுந்து அவர் வீட்டின் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வதைக் கண்டு சரவணன் வியந்துள்ளார். அரக்கப்பறக்க சமைத்து, பிள்ளைகளைக் கவனித்து, பள்ளிக்குக் கிளம்பத் தயாரான மனைவியிடம் கைகளைக் குலுக்கி, “பிறந்தநாளைப் பெருசா கொண்டாட நினைச்சேன், ஸாரிப்பா” என்று சரவணன் கூற, “நீங்க வாழ்த்துச் சொன்னதே பெருசுப்பா” என கலா புன்னகைத்துள்ளார். மனைவியின் அந்தப் பேரன்பிற்கு முன்னால், “கொஞ்சமும் கூச்சமின்றி பதிலுக்குச் சிரித்தான் சரவணன் என்கிற மகத்தான சல்லிப்பயல்” என்று தங்களைத் தியாகம் செய்யும் ஒட்டுமொத்தப் பெண்களின் உன்னதத்தையும், ஆண்களின் சுயநலப் போக்கையும் நெற்றிப்பொட்டில் அடித்தார் போல் பதிவிட்டுள்ளார் இயக்குநர்.

SATHISH R

Recent Posts

ரூ.30 கோடி பேரம்… அதிரடியாகத் தூக்கப்பட்ட அதிமுக பிரமுகர்….. “முஸ்தபா ஒன்றும் அரிச்சந்திரனும் இல்லை”…. எடப்பாடி & செல்லூர் ராஜூவின் அதிரடி தாக்குதல்….!

மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவுக்கு எதிராக எழுந்துள்ள லஞ்சப் பேரம் புகார் மற்றும் அதிமுக நிர்வாகி மன்னனின்…

4 minutes ago

“அமைச்சர் கிளம்பிய சில நிமிடங்களில்… அதிரடியாக இடிந்து விழுந்த ஆட்சியர் அலுவலகச் சிலாப்”…. அமைச்சர் கிளம்பிய சில நிமிடங்களில்… இடிந்து விழுந்த சிலாப்…!

வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ‘ஏ’ பிளாக் ஐந்து தளங்களைக் கொண்ட கட்டடமாகும். இக்கட்டடத்தின் மூன்றாவது மாடியில்…

8 minutes ago

போதையில் அட்டகாசம்… மோதிட்டேன்.. என்னடா பண்ணுவ?… நடுரோட்டில் டிரைவர் மோதல்… அப்பாவி மக்களுடன் கூச்சல் போட்ட பயங்கரம்…!!

குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள முக்கிய வீதியொன்றில், மதுபோதையில் தள்ளாடியபடி ஆட்டோவை தாறுமாறாக ஓட்டிவந்த நபர் ஒருவர், அவ்வழியே சென்றுகொண்டிருந்த இருசக்கர…

10 minutes ago

பழிவாங்கலா?… கொடூர தாக்குதலா?… கத்தியால் சரமாரி வெட்டு… போலீசையே உறைய வைத்த சிறுமியின் வாக்குமூலம்… நடந்தது என்ன?…!!

சோச்சா நகரில் அமைந்துள்ள ஜார்டின் மைபோரே குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

24 minutes ago

அலறியடித்து ஓடிய மக்கள்… நடுரோட்டில் நடந்த ரியல் ‘GTA’ ஆட்டம்… யார் அந்த மர்ம டிரைவர்?!… திடீரென பின்னோக்கி பாய்ந்த கார்… சிசிடிவியிலும் சிக்காத மர்மம்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் அமைந்திருக்கும் அக்ஷய பாத்ரா கோயில் சுற்றுவட்டாரத்தில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் கடுமையான பரபரப்பு…

32 minutes ago

ஆந்திராவில் கரை ஒதுங்கிய உடல்கள்… காசிமேட்டில் வெடித்த மக்கள் ஆத்திரம்… எங்கே போனார் மீன்வளத்துறை அமைச்சர்?…. அடுத்த பரபரப்பு….!

காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற 9 மீனவர்கள் உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.…

40 minutes ago