சம்பவத்தன்று சென்னை பாரிமுனை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள், கட்சியின் பெயரிடப்பட்ட துண்டு அணிந்து பொதுமக்களிடம் சில கருத்துக்கணிப்புகளை (சர்வே) சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த திமுகவினர், இதுபோன்ற சர்வேக்களை எடுப்பதற்கு முறையான காவல்துறை அனுமதி பெற வேண்டும் என்று கூறி அவர்களைத் தடுத்துள்ளனர். இதனால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியது.
இந்தத் திடீர் மோதலால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இரு தரப்பினரையும் கலைந்து போகச் செய்து நிலைமையைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாகப் புகார் ஏதும் அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும், அனுமதியின்றி சர்வே எடுக்கப்பட்டதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…