பாஜகவோடு நாளை திமுக கைகோர்க்கும் நிலை கூட ஏற்படலாம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சனாதன எதிர்ப்பு மற்றும் சாதி ஒழிப்பை முன்னிறுத்தித் தான் தங்களது அரசியல் நகர்வதாகவும், அந்த வகையில் பாஜகவை எதிர்க்கிற வரை மட்டுமே திமுக போன்ற கட்சிகள் தங்களுக்கு நட்பு சக்திகளாக இருக்க முடியும் என்றும் தங்களின் அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், கொள்கை ரீதியாக சனாதனத்தை எதிர்க்கும் போது பாஜகவை விமர்சிக்க வேண்டிய கட்டாயம் தங்களுக்கு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் திமுகவின் மிக முக்கிய கூட்டணிக் கட்சித் தலைவரான திருமாவளவனின் இந்த வெளிப்படையான பேச்சு, தமிழக அரசியலில் எதிர்காலக் கூட்டணிக் மாற்றங்கள் குறித்த விவாதங்களை மீண்டும் சுடரவைத்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…
லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…
பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…