Categories: CINEMA

ரஹ்மானை சராசரி இசையமைப்பாளர் என சொன்ன சல்மான் கான்… இசைப்புயல் கொடுத்த் தக் லைஃப் ரிப்ளை!

இந்தி சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை தமிழ் பாடல்கள் பக்கம் திருப்பியவர் இளையராஜா என்றால், இந்தி ரசிகர்களையும் தமிழ் சினிமா பாடல்களைக் கேட்க வைத்தவர் ஏ ஆர் ரஹ்மான் என்று சொல்வார்கள்.

தான் அறிமுகமான ரோஜா திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் ஹிட்டடித்தன. அதன் பின்னர் ரஹ்மான் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோரோடு இணைந்து பணியாற்றிய படங்களின் பாடல்கள் எல்லாம் இந்தியா முழுவதும் வைரல் ஹிட்டாகின. பாடல்களுக்காகவே சில பாடல்கள் ஹிட்டாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி இவரின் அசுர வளர்ச்சியானது அவரை பாலிவுட் வரை கொண்டு சென்றது. அங்கு அப்போது முன்னணியில் இருந்த நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தங்கள் படங்களுக்கு ரஹ்மான் இசையமைக்க வேண்டும் என விரும்பினர். இப்படி ஷாருக் கான் மற்றும் அமீர்கான் ஆகியோரின் படங்களுக்கு இசையமைத்த ரஹ்மான் சல்மான் கான் படத்துக்கு மட்டும் நீண்ட நாட்களாக இசையமைக்கவில்லை.

பின்னர் ஒரு கட்டத்தில் யுவ்ராஜ் என்ற படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினர். அப்போது நடந்த ஒரு ப்ரமோஷன் விழா மேடையில் பேசிய சல்மான் கான் ரஹ்மானைக் கலாய்க்கும் விதமாக “ரஹ்மான் ஒரு சாதாரண ஆள்தான்(இசையமைப்பாளர்தான்)” என பேசினார். இத்தனைக்கும் அப்போது அவர் ஆஸ்கர் விருது வென்றிருந்தார்.

பின்னாளில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏ ஆர் ரஹ்மானிடம் “நீங்கள் ஏன் சல்மான் கான் படங்களுக்கு இசையமைக்கவில்லை” எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் “சல்மான் கான் , அதற்கு எனக்குப் பிடித்த மாதிரியான படங்களில் நடிக்க வேண்டும்” எனக் கூறினார்.

தன்னை சாதாரண இசையமைப்பாளர் எனக் கூறிய சல்மான் கானுக்கு இதன் மூலம் பதிலை அளித்தார். பாலிவுட்டின் வாய் துடுக்கான ஹீரோக்களில் ஒருவரான சல்மான் கான் இதுபோல பலரையும் வம்பிழுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

6 மணி நேரங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

8 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

9 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

9 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

10 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

12 மணி நேரங்கள் ago