Categories: CINEMA

வாழ்க்க ஒரு வட்டம்னு இதனாலதான் சொல்றாங்களோ… பாலச்சந்தருக்கும் AR ரஹ்மானுக்கும் ரோஜா படத்துக்கு முன்பே இருக்கும் தொடர்பு..

இந்தி சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை தமிழ் பாடல்கள் பக்கம் திருப்பியவர் இளையராஜா என்றால், இந்தி ரசிகர்களையும் தமிழ் சினிமா பாடல்களைக் கேட்க வைத்தவர் ஏ ஆர் ரஹ்மான் என்று சொல்வார்கள்.

தான் அறிமுகமான ரோஜா திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் ஹிட்டடித்தன. அதன் பின்னர் ரஹ்மான் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோரோடு இணைந்து பணியாற்றிய படங்களின் பாடல்கள் எல்லாம் இந்தியா முழுவதும் வைரல் ஹிட்டாகின. பாடல்களுக்காகவே சில பாடல்கள் ஹிட்டாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரோஜா படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, அந்த படத்தை தயாரித்தார் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர். அவரின் கவிதாலயா பிலிம்ஸ் அப்போது இளையராஜாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தங்கள் மூன்று படங்களுக்கு மூன்று வெவ்வேறு இசையமைப்பாளர்களை ஒப்பந்தம் செய்தது. அப்படிதான் ரோஜா படத்துக்குள் வந்தார் ரஹ்மான்.

இப்படி ரஹ்மானின் முதல் படத்தில் கே பாலச்சந்தர் முக்கிய நபராக இருந்த நிலையில், கே பாலச்சந்தரின் முதல் படமான நீர்க்குமிழி திரைப்படத்தில் ஏ ஆர் ரஹ்மானின் தந்தை சேகர் பணியாற்றியுள்ளார். நீர்க்குமிழி படத்துக்கு வீ குமார் இசையமைத்த நிலையில் அவரிடம் சேகர் ஆர்க்கெஸ்ட்ரராக பணியாற்றியுள்ளார்.  இதை ஏ ஆர் ரஹ்மானின் பயோபிக் புத்தகத்தில் எழுத்தாளர் விஜய் மகேந்திரன் பதிவு செய்துள்ளார்.

ரஹ்மானின் தந்தை சேகர் இசையமைப்பாளராக சில படங்களில் பணியாற்றி இருந்தாலும், பல இசையமைப்பாளர்களுக்கு நடத்துனராகவும், இஞ்சினியராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  உடல்நலக் குறைவு காரணமாக அவர் மிக இளம் வயதிலேயே உயிரிழந்துவிட்டார் என்பதால் அவர் வாங்கி வைத்திருந்த இசைக் கருவிகளை வாசிக்க ஆரம்பித்து அதன் மூலம் வருமானம் ஈட்ட ஆரம்பித்தார் அப்போது சிறுவனாக இருந்த திலீப் குமார்( ஏ ஆர் ரஹ்மானின் அப்போதைய பெயர்).

இப்படி இவர்கள் இருவருக்குள்ளும் ஒரு மறைமுக தொடர்பு இருந்துள்ளது. அதன் பின்னர் ஏ ஆர் ரஹ்மான் பாலச்சந்தரின் டூயட் மற்றும் பார்த்தாலே பரவசம் ஆகிய திரைப்படங்களுக்கும் இசையமைத்து சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

vinoth

Recent Posts

மாஸ்டர் சொன்ன ஐடியா எனக்கு புடிச்சது.. தயவுசெஞ்சு இதை மட்டும் பண்ணுங்க.. மக்களுக்கு எஸ்ஜே சூர்யா விடுத்த கோரிக்கை..!

காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண் விவசாயிக்கு மாற்றம் அறக்கட்டளை மூலமாக விவசாய டிராக்டர் சாவினை வழங்கும் நிகழ்ச்சியில்…

30 நிமிடங்கள் ago

கல்யாணம் பண்ணிக்கிறவங்கள பாத்தா எனக்கு.. 62 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் கோவை சரளா ஓபன் டாக்..!

தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை திறமையால் பல வருடங்களாக நடித்து வருபவர் நடிகை கோவை சரளா. நகைச்சுவை ஒரு மனிதனுக்கு…

2 மணி நேரங்கள் ago

104 டிகிரி Fever-லயும் அப்படி ஒரு எனர்ஜி.. அந்த பாட்டுக்காக ரஜினி மெனக்கிட்டதை பற்றி பெருமையாக பேசிய நடிகை வடிவுக்கரசி…!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆகி மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. அடுத்ததாக…

2 மணி நேரங்கள் ago

தன்னுடைய பேங்க் பேலன்ஸ் சொல்லி.. கவின் பட நடிகைக்கு ப்ரொபோஸ் பண்ணிய பிரபல நடிகர்.. மனம் திறந்த அபர்ணா தாஸ்..!

கவின் திரைப்படத்தின் மூலம் பிரபலமான அபர்ணா தாஸ் தனது காதல் கணவர் தனக்கு ப்ரபோஸ் செய்த முறையை ஒரு பேட்டியில்…

3 மணி நேரங்கள் ago

பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்திய ‘மகாராஜா’.. 4 நாட்களில் மொத்த வசூல் இத்தனை கோடியா..?

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தின் 4-வது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

3 மணி நேரங்கள் ago

விதார்த், வாணி போஜனை கைது செய்யுங்கள்.. ரிலீஸ் ஆன 10 நாட்களில் அஞ்சாமை படத்திற்கு வந்த சிக்கல்…!!

அஞ்சாமை திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. இந்த படத்தில் விதார்த் ஹீரோவாக நடித்துள்ளார். நடிகை வாணி போஜன்…

3 மணி நேரங்கள் ago