தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மற்றும் எலைட் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் இரவு 10 மணிக்குள் கண்டிப்பாக மூடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், FL2 மற்றும் FL3 உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் (பார்கள்) தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூடும் நேரம் தொடர்பான விதிமுறைகளை ஏதேனும் கடைகள் மீறினால், அந்தந்தப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரவு நேர மது விற்பனையைக் கட்டுப்படுத்த காவல்துறைக்கு முழுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் சேர்த்து சட்டம் ஒழுங்கு மற்றும் நீதித்துறை சார்ந்த முக்கிய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, போக்சோ சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளை 60 நாட்களுக்குள்ளும், கொலை வழக்குகளை 90 நாட்களுக்குள்ளும் விசாரணை செய்து விரைவாக முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவு மற்றும் அரசு வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு தீவிரமாகச் சேகரித்து வருவதாகத்…
நாக்பூரில் நள்ளிரவு நேரத்தில் அத்துமீறி பைக்குகளை தாறுமாறாக ஓட்டிச் சென்ற ஒரு கும்பல், தன் காரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த…
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கிப் படித்து…
தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத வகையில் புதிய திருப்பங்களையும், பரபரப்பான விவாதங்களையும் சந்தித்து வருகிறது. சமீபத்திய தேர்தல்…
நவி மும்பை ஐரோலியில் உள்ள ரஜமாதா ஜிஜாவ் மாநகராட்சி மருத்துவமனையில், தவறான ஊசி செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் புகாரில் 8 மாத…
முன்னாள் அமைச்சரும், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகத்திற்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம்…