#image_title
சன் டிவியில் புது சீரியல் ஒன்று பபூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.
சீரியலுக்கு என பெயர் போன தொலைக்காட்சி சன் டிவி. இந்த தொலைக்காட்சியில் புதுசு புதுசாக சீரியல்கள் தொடங்கி ஒளிபரப்பாகி வருகின்றது. அடுத்தடுத்து இரண்டு சீரியல்கள் முடிவடைந்த நிலையில் அந்த இடத்திற்கு வேறு இரண்டு சீரியல்கள் தொடங்கி ஒளிபரப்பாகி வருகின்றது.
இந்நிலையில் தற்போது பூவா தலையா சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. இந்த சீரியலுக்கு பதிலாக புது சீரியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பூஜையோடு தொடங்கிய சில சீரியல்கள் இன்னும் வெளிவராமல் இருக்கும் நிலையில் சமீபத்தில் எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் நடிக்கும் சொக்கத்தங்கம் என்ற சீரியலின் பூஜை இன்று தொடங்கி நடைபெற்றுள்ளது.
நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற சொக்கத்தங்கம் என்ற திரைப்படத்தின் பெயரை இந்த சீரியலுக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். மேலும் இந்த சீரியலில் தர்ஷன் கேரக்டரில் நடித்த ரித்திக் ராகவேந்திரா, ஜான்சிராணி கதாபாத்திரத்தில் நடித்த காயத்ரி, கரிகாலன் கேரக்டரில் நடித்த விமல் குமார் ஆகிய பலரும் இந்த சீரியலில் நடித்திருக்கிறார்கள்.
மேலும் சன் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பூவா தலையா சீரியல் முடிவடைய உள்ள நிலையில் இந்த சீரியல் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த சீரியலை 18 ரீல்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலையும் இந்த தயாரிப்பு நிறுவனம் தான் தயாரித்து வருகின்றது. இன்னும் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் 'பாய்ஸ்', 'பிரியமானவளே' போன்ற பல திரைப்படங்களிலும், 'சித்தி' உள்ளிட்ட புகழ்பெற்ற சின்னத்திரை தொடர்களிலும் நடித்து கவனம் ஈர்த்தவர்…
பிரபல சமையல் கலைஞரான செஃப் தாமுவின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம்…
1990-களில் சில்க் சுமிதாவின் தங்கையாகத் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய ஷகிலா, குறுகிய காலத்திலேயே மலையாளத் திரையுலகில் தவிர்க்க முடியாத…
கேரள மாநிலம் கொச்சி அருகே சேரநல்லூர் பகுதியில் அதிகாலையில் நிகழ்ந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் சொகுசு…
ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகப் பயணிகள் தங்களின் பயணச்சீட்டைப் பெறும்போது, விருப்பப்பட்டால் விருப்பத் தேர்வாகப் பயணக் காப்பீட்டையும்…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…