தமிழ்நாடு தாண்டலம் அருகே உள்ள அதிவேக மல்டி-லேன் தேசிய நெடுஞ்சாலையில், மினி பேருந்து ஒன்று சற்றும் பொறுப்பின்றி எதிர்த்திசையில் அதிவேகமாக இயக்கப்பட்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிரே வந்த கண்டெய்னர் லாரிகள் மற்றும் பிற வாகனங்கள் மோதாமல் இருக்க, திடீரென பிரேக் பிடித்தும் வாகனங்களைத் திருப்பியும் தப்பின. மேலும், அந்த மினி பேருந்தைத் தொடர்ந்து பல இருசக்கர வாகன ஓட்டிகளும் எதிர்த்திசையிலேயே பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
இந்த ஆபத்தான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். TN12 BP 9003 எண்ணைக் கொண்ட அந்த மினி பேருந்தின் ஓட்டுநருக்கு உடனடியாகச் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறையினருக்கு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் எந்த அசம்பாவிதமோ, காயங்களோ ஏற்படவில்லை என்றாலும், நெடுஞ்சாலைகளில் இத்தகைய விதிமீறல்கள் நேருக்கு நேர் மோதும் கொடூர விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால் கடும் நடவடிக்கை தேவை எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…