அடுத்தடுத்து வீழ்ந்த அமெரிக்க விமானங்கள்… “உயிருடன் பிடித்துக் கொடுத்தால் மெகா பரிசு!”… ஈரானின் அதிரடி அறிவிப்பு… பதற்றத்தில் வளைகுடா…!!!

Spread the love

ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது போரைத் தொடங்கின. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாக சிசிடிவி கேமராக்கள் மூலம் கமேனியின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்த இஸ்ரேல் உளவுத்துறை, மிகத் துல்லியமாக இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்குப் பழிவாங்கும் விதமாக, ஈரான் தற்போது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவான வளைகுடா நாடுகள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஈரான் கிட்டத்தட்ட அழிந்துவிட்டதாகவும், அங்கு புதிய அரசு அமைந்துவிட்டதால் இன்னும் இரண்டு வாரங்களில் போர் முடிவுக்கு வரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். இருப்பினும், கள நிலவரம் வேறாக உள்ளது. பாரசீக வளைகுடா பகுதியில் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் சக்திவாய்ந்த A-10 WARTHOG ரகத் தாக்குதல் விமானத்தை ஈரானியப் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் F-15E போர் விமானம் ஒன்றும் ஈரானிய ராணுவத்தால் வீழ்த்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானங்களின் விமானிகளை உயிருடன் பிடிக்க உதவுபவர்களுக்குப் பெரிய அளவிலான சன்மானம் வழங்கப்படும் என ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “விமானிகளைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு விலைமதிப்பற்ற வெகுமதிகளும், சன்மானமும் வழங்கப்படும்” என ஈரான் தேசியத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா போர் முடிவுக்கு வருவதாகக் கூறினாலும், ஈரானின் இந்தத் தொடர் அதிரடி நடவடிக்கைகள் மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.

Muthu Mani

Share
Published by
Muthu Mani

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

1 மணத்தியாலம் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

1 மணத்தியாலம் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

1 மணத்தியாலம் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

1 மணத்தியாலம் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

2 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

2 மணத்தியாலங்கள் ago