ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வரும் சென்னையைச் சேர்ந்த சக்தி விநாயகம் என்பவருக்கு, துபாய் ‘பிக் டிக்கெட்’ குலுக்கலில் ஜாக்பாட் அடித்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக அங்கு தங்குமிடப் பொறுப்பாளராக வேலை பார்த்து வரும் இவருக்கு, இந்திய மதிப்பில் சுமார் 2.25 கோடி ரூபாய் பரிசுத் தொகையாகக் கிடைத்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களாகத் தொடர்ந்து லாட்டரி வாங்கி வரும் இவருக்கு, இந்த எதிர்பாராத வெற்றி பெரும் வியப்பையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, துபாயில் கடந்த 25 ஆண்டுகளாக ஓட்டுநராகப் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த பஷீர் என்பவருக்கும் அதிர்ஷ்டம் கதவைத் தட்டியுள்ளது. அவர் வாங்கிய டிக்கெட்டிற்கு இந்திய மதிப்பில் சுமார் 24 லட்சம் ரூபாய்) பரிசாகக் கிடைத்துள்ளது. நீண்ட கால உழைப்பிற்குப் பிறகு கிடைத்த இந்தத் தொகையைத் தனது குடும்பத்தின் நலனுக்காகச் செலவிடப் போவதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அரபு நாடுகளில் வேலை பார்த்து வரும் இந்தியத் தொழிலாளர்களுக்கு இந்த லாட்டரி வெற்றிகள் பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளன.
திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினரிடையே கட்சி பொறுப்புகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தனியார் நாளிதழ்…
திண்டுக்கல் மாவட்ட திமுகவின் முக்கியத் தூண்களில் ஒருவராக விளங்கிய மாநில நிர்வாகி வி.ஜெயன், கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். திமுகவின்…
வரும் அக்டோபர் 23-ம் தேதி உருவாகவிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேலும் வலுவடைந்து புயலாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக…
சிவகங்கை மாவட்டத்தில் சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளியான 'சுள்ளான் மதன்' கடந்த அக்டோபர் 18-ம் தேதி மர்மக் கும்பலால் கரும்புத் தோட்டத்தில்…
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தொடர்பான வாடிக்கையாளர் தரவு கசிவு குறித்த செய்தி…
விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் களமிறங்குவது உறுதியாகியுள்ளதாக அமைச்சர் கே.ஏ.…