நடிகர் ஒய்ஜி மகேந்திரனின் சொந்தங்கள், அத்தனை பேருமே திரை பிரபலங்கள்தானா -ரஜினி நெருங்கிய சொந்தமா, தலையே சுத்துதே சாமி

Spread the love

தமிழ் சினிமாவில் 1980, 90களில் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஒய் ஜி மகேந்திரன். ரஜினி, கமல் என இரண்டு முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடித்திருக்கிறார். சில படங்களில் வில்லன் சைடு ஆட்களிலும் ஒருவராகவும் ஒய்ஜி மகேந்திரன் இருந்திருப்பார். இப்போது சமீபத்தில் கூட வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படும் கட்சி பொதுச் செயலாளராக ஒரு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ஒய்ஜி மகேந்திரன்.

நடிகர் ஒய்ஜி மகேந்திரனின் குடும்ப உறவுகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தினால் அவரது குடும்ப உறவினர்கள் அனைவருமே சினிமா சம்பந்தபட்டவர்களாகவே இருக்கின்றனர். சினிமா பிரபலங்களின் மகனாக, மகளாக, உறவினராக இருக்கின்றனர். ஒய்ஜி மகேந்திரனின் அப்பா ஒய்ஜி பார்த்தசாரதி, அமெச்சூர் நாடக நடிகராக இருந்தவர். நாடகங்களை நடத்தியவர். ஒய்ஜி மகேந்திரன் சினிமாவுக்கு வரும்முன் நிறைய நாடகங்களை நடத்தியவர் என்பதும் கவனிக்கத்தக்கது. ஒய்ஜி பார்த்தசாரதியின் தங்கை வசுந்தரா தேவி. இவர் அந்த காலகட்டத்தில் ஒரு பிரபலமான நடிகையாக இருந்தவர். இவரது மகள் வைஜெயந்தி மாலா, கோலிவுட் முதல் பாலிவுட் வரை கொடி நாட்டிய பிரபல நடிகை.

ஒய்ஜி பார்த்தசாரதியின் மனைவி, அதாவது ஒய்ஜி மகேந்திரன் அம்மா ராஜலட்சுமி, பத்மாஸ்ரீ பள்ளிகளை நிறுவியவர். குமுதம், இந்து நாளிதழ்களில் பணிசெய்த பத்திரிகையாளர். இவரது தாத்தா ரங்காச்சாரியார்தான் இந்திய சினிமாவில் சென்சார் போர்டு என்ற அமைப்பை கொண்டு வந்தவர். ராஜலட்சுமியின் சகோதரர்தான் பிரபல சினிமா தயாரிப்பாளர், கே. பாலாஜி. சிவாஜி, ரஜினி, கமல் படங்களை தயாரித்தவர். கே. பாலாஜி பல படங்களில் நடித்தும் இருக்கிறார். கே பாலாஜியின் மகன் சுரேஷ் பாலாஜி. இவரும் சினிமா தயாரிப்பாளர். கே பாலாஜி மகள் சுசித்ரா, பிரபல மலையாள நடிகர் மோகன்லாலை திருமணம் செய்திருக்கிறார்.

இவர்களது மகன் பிரணவ்தான் பாபநாசம் படத்தின் உதவி இயக்குநர். ஒய்ஜி மகேந்திரனின் மனைவி சுதாவின் தங்கை தான் லதா ரஜினிகாந்த். இவர் ரஜினிகாந்தை திருமணம் செய்திருக்கிறார். லதாவின் தம்பி ரவி ராகவேந்தர் ஒரு நடிகர். விசு படங்களில் நிறைய நடித்திருக்கிறார். இவரது மகன்தான் பிரபல இசையமைப்பாளர் அனிரூத். ரஜினிகாந்த் – லதா தம்பதியின் மகள்களான ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்திருக்கிறார். ஒய்ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி, ஜெமினி, சாவித்திரியின் மகள் டாக்டர் சாமுண்டீஸ்வரியின் மகன் அருணை திருமணம் செய்திருக்கிறார். இப்படி உறவு சங்கிலியில் சினிமா சார்ந்த உறவுகள் ஒய்ஜி மகேந்திரனுக்கு நீண்டுகொண்டே போகிறது.

admin

Recent Posts

“நைட்டி போடாதன்னு சொன்னேன்ல…?” மனைவியை எரித்துக் கொல்ல முயன்ற தொழிலாளி…! குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…

1 minute ago

“நீயும் அழகா இருக்க..” வாலிபரை வீட்டுக்குத் தூக்கிச் சென்று தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…

9 minutes ago

“எல்லாரோட லட்சணமும் எனக்குத் தெரியும்” விஜய் -திரிஷா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை வனிதா..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…

13 minutes ago

இந்த வருடத்துக்கு பின் பிறந்தவர்கள் இனி வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது… இங்கிலாந்தின் அதிரடிச் சட்டம்..!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…

17 minutes ago

மீண்டும் அதிர்ச்சி..! ட்ரம்ப் போர் நிறுத்த அறிவிப்பு செய்த சில மணி நேரங்களில்… ஷாக் கொடுத்த ஈரான்… பற்றி எரியும் ஹர்மூஸ்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…

22 minutes ago

உயிரா? செல்போனா? 15,000 ரூபாய் போனைப் பாதுகாக்க உயிரை விட்ட வாலிபர்… நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…

29 minutes ago