இனி தப்பவே முடியாது?… ரூ.100 கோடி மோசடி வழக்கு… அன்பில் மகேஸுக்கு இடைக்கால நிவாரணம் மறுப்பு… மனுவை நிராகரித்த நீதிமன்றம்…!!

Spread the love

தனியார் பள்ளிகளுக்குத் தேவையான நிரந்தர அங்கீகாரம் மற்றும் கட்டட அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்து, நூறு கோடி ரூபாய்க்கும் மேல் பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனியார் பள்ளி நிர்வாகிகள் அளித்த இந்தப் புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவருக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனைகளையும் மேற்கொண்டனர்.

இந்த நெருக்கடியான சூழலில், தன் மீது காவல் துறையினர் பதிவு செய்துள்ள மோசடி வழக்கினை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அந்த வழக்கில் எந்தவிதமான கைது நடவடிக்கையும் எடுக்காதவாறு தனக்கு இடைக்காலப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. லட்சுமி நாராயணன், வழக்கை ரத்து செய்யக் கோரும் மனுவின் அடிப்படையில் கைது நடவடிக்கைக்கு எதிரான இடைக்கால நிவாரணங்களை வழங்க இயலாது எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். கைதைத் தவிர்க்க விரும்பினால் முறையாக முன்ஜாமீன் கோரி தனியாக மனுத் தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்திய நீதிபதி, இந்த விவகாரம் குறித்துக் காவல்துறை தரப்பில் தகுந்த விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

Gayathri

Recent Posts

அடே… திமுகவை சொன்னா இபிஎஸ்-க்கு எதுக்கு கோவம் வருது?… ஒரே வார்த்தையில் எடப்பாடியை காலி செய்த… விஜய்யின் அதிரடி டயலாக்… அரசியலில் பரபரப்பு…!!

விஜய் மேற்கொண்டுள்ள இந்த அதிரடிப் பிரச்சாரம் தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்யபாமாவை…

5 minutes ago

“அப்பா எங்களோட தான் இருக்காரு!”… கிளினிக்கில் இருந்து வந்த துர்நாற்றம்… 4 ஆண்டுகளாக தந்தை உடலை ஏசியில் வைத்திருந்த மகள்… மும்பையை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

மும்பை மலாடு பகுதியில் மூடிக்கிடந்த ஒரு கிளினிக்கில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு…

8 மணத்தியாலங்கள் ago

கள்ளக்காதல் காரணமா?.. தாய்க்கும் தொடர்பா?… கோயம்பேட்டில் 9 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்… அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்…!!

சென்னை கோயம்பேடு நியூ காலனி பகுதியில் வசித்து வரும் பூங்கொடி என்பவரின் 9 வயது மகன் தருண் மர்மமான முறையில்…

9 மணத்தியாலங்கள் ago

நடுவானில் பயங்கரம்…! கேப்டனுக்கு கத்திக்குத்து… 17,000 அடியில் விமானம் தடுமாறியதால் அலறிய பயணிகள்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல்-அவிவ் நகருக்குச் சென்று கொண்டிருந்த ஃப்ளைதுபாய் விமானத்தில், ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி திடீரென இந்திய…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கள்ளக்காதலனுடன் தகராறு… ஆத்திரத்தில் 9 வயது சிறுவனின்… கழுத்தை நெரித்துக் கொன்ற போதை ஆசாமி… கோயம்பேட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

சென்னை கோயம்பேடு நியூ காலனியைச் சேர்ந்த தீபக் - பூவரசி தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த…

9 மணத்தியாலங்கள் ago