உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ரத்த உறவே எமனாக மாறிய ஒரு கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினக்கூலித் தொழிலாளர்களின் மகளான நான்கு வயது சிறுமி ஒருவரை, அவரது சொந்தத் தாய்மாமாவே கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். பார்வையற்றவரான சிறுமியின் தந்தையிடம், குழந்தைக்குத் தின்பண்டங்கள் வாங்கித் தருவதாகக் கூறி ஆசை வார்த்தை சொல்லி அழைத்துச் சென்ற அந்த நபர், சிறுமியைச் சிதைத்துக் கொலை செய்த பின், சடலத்தை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரின் அடியில் வீசிச் சென்றுள்ளார்.
மேலும் காணாமல் போன குழந்தையைத் தேடியபோது, காரின் அடியில் ரத்தக் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது காண்போரை நிலைகுலையச் செய்தது. முதற்கட்ட விசாரணையில், முசாபர்நகரைச் சேர்ந்த அந்த நபர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும், தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகச் சிறுமியின் வீட்டில் தங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த பயங்கர சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் கொலை மற்றும் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள அந்த நபரைக் கைது செய்ய காசியாபாத் காவல்துறை ஐந்து தனிப்படைகளை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மனிதாபிமானமற்ற இந்தச் செயல் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…