சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ரஞ்சித் என்ற பெயிண்டர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி பழகி வந்துள்ளார். இவர்களது காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த ஜனவரி மாதம் ரஞ்சித் அச்சிறுமியை ஆசை வார்த்தை கூறி யாருக்கும் தெரியாமல் அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். பின்னர், அவர்கள் அதே பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், ரஞ்சித் அவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூன்று மாத கர்ப்பிணியாக இருப்பதை உறுதி செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 18 வயது பூர்த்தியடையாத சிறுமி என்பது தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், உடனடியாக சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, 18 வயது பூர்த்தியடையாத சிறுமியைக் கடத்திச் சென்று, ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக ரஞ்சித் மீது போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையறிந்து ரஞ்சித் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், அவரைப் பிடிப்பதற்காகப் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் ஒரு வீடியோ தற்பொழுது வேகமாகப் பரவி வருகிறது. அந்தப் பதிவில், போதைப்பொருள் உட்கொண்டதாகக்…
உத்தரப் பிரதேசத்தில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் அஸ்ஜத், கட்டுப்பாட்டை இழந்த ஒரு வண்டிக்கு இடையே தலை மற்றும்…
தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக அன்றாடம் அரங்கேறி வரும் குற்றச் சம்பவங்களைக் கண்டு கொள்ளாமல் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வாய்மூடி…
தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் குளிப்பதைத் தனது செல்போனில் எட்டிப்பார்த்த தம்புக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சி…
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 4 முதல் 12-ஆம் வகுப்புகளுக்குத் திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று…
கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் தற்காலிகக் கட்டண விலக்கு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.…