மதபோதகராக மாறிய 90’ஸ் பிரபல நடிகை மோகினி… அவரின் குடும்பத்தை பாத்துருக்கீங்களா?… புகைப்படம் வைரல்…

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை மோகினி. இவர் 1991 ஆம் ஆண்டு ‘ஈரமான ரோஜாவே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் 1978 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்தார்.இவரின் இயற்பெயர் மகாலட்சுமி. ஈரமான ரோஜாவே படத்தை தொடர்ந்து புதிய மன்னர்கள் , நானா பேச நினைப்பதெல்லாம், நாடோடி பாட்டுக்காரன் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

   

இவர் நடித்த படங்கள் மூலம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இவர் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் கூட நடித்துள்ளார். நடிகை மோகினி 1996 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் காதல் பகடை, 2006 ஆம் ஆண்டு ராஜராஜேஸ்வரி , பொதிகை தொலைக்காட்சியில், ஒரு பெண்ணின் கதை போன்ற தமிழ் தொடர்களிலும் மற்றும் ஜெய்ஹிந்த் தொலைக்காட்சியில் “கதனார் கடம்பத்து கதனார்” என்ற மலையாள தொடரிலும் நடித்துள்ளார்.

ராஜராஜேஸ்வரி சீரியலுக்கு பின்னர் இவரை எந்த சினிமாவிலும் சீரியலில் கூட காண முடியவில்லை. இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட,  இவர் 1999 ஆம் ஆண்டு பரத் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பின்னர் இவர் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதிக்கு ருத்ரகேஷ் மற்றும் அனிருத் என்ற மகன்கள் உள்ளனர் . இவர் 2006ஆம் ஆண்டு அவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்.

அதன் பிறகு சில தொலைக்காட்சி தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்த மோகினி தற்போது நடிப்பை முழுமையாக நிறுத்திவிட்டு மத போதகராகி உள்ளார் என்றும் அமெரிக்காவில் உள்ள பல சர்ச்களில் அவர் மத போதக பணியை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. அவ்வப்போது அவர் சென்னைக்கும் வருவதாகவும் இங்கும் அவர் சில சர்ச்சுகளுக்கு சென்று அவர் மத போதக உரை நிகழ்த்துவதாகவும் சொல்லப்படுகிறது.