சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கத்தில் தங்கி ராஜ்குமார் என்பவர் வாடகை கார் ஓட்டி வருகிறார். இவர் பழனி நெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர். கடந்த செப்டம்பர் மாதம் 9- ஆம் தேதி ராஜ் குமாரின் செல்போன் எண்ணுக்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து 9000 கோடி ரூபாய் டெபாசிட் ஆனதாக குறுந்தகவல் வந்தது.
அதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் செய்வதறியாமல் திகைத்து போனார். யாரோ மோசடி நபர்கள் தன்னை ஏமாற்றுவதாக முதலில் நினைத்தார். இதனால் தனது நண்பருக்கு முதற்கட்டமாக 21,000 பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்த மீதமுள்ள பணத்தை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி திரும்ப வாங்கிக் கொண்டது.
முன்னதாக வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ராஜ்குமாரை தொடர்பு கொண்டு பேசிய அதிகாரிகள் தவறுதலாக பணத்தை டெபாசிட் செய்ததாக கூறியுள்ளனர். இதனையடுத்து நண்பருக்கு பகிரப்பட்ட பணத்தை செலவு செய்ய வேண்டாம் எனவும் வங்கி நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
இதனை தொடர்ந்து வங்கியின் தி.நகர் கிளை சார்பிலும், ராஜகுமாரின் சார்பிலும் வழக்கறிஞர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர். அவர் டிரான்ஸ்பர் செய்து 21,000 பணத்தை ராஜ்குமார் திருப்பி கொடுக்க வேண்டாம் எனவும், அதற்கு பதிலாக வாகன கடன் வழங்குவதாகவும் வங்கி தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…