தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், பாஜக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும் நிர்வாகிகளும் தவெகவில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினரை வரவேற்கும் நிகழ்ச்சியில், அதிமுகவைச் சேர்ந்த 90 சதவீத தொண்டர்கள் தவெகவை நோக்கி வரத் தொடங்கியுள்ளதாகத் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் மற்றும் தற்போதைய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
அதிமுகவும் தமிழக வெற்றிக் கழகமும் இணைந்தால் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய அரசியல் சக்தி உருவாகும் என்றும், இதுவே முதல்வர் விஜய்யின் விருப்பம் என்றும் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிமுகவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்த மூத்த தலைவர் செங்கோட்டையனை அக்கட்சித் தலைமை புறக்கணித்ததாகவும், ஆனால் தவெக தலைவர் விஜய் அவரை அன்போடு வரவேற்று இன்று சட்டமன்ற அவை முன்னவராகவும் அமைச்சராகவும் பொறுப்பு வழங்கியுள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டிப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், தவெகவில் இணையும் அதிமுக தொண்டர்களை முதல்வர் விஜய் மகிழ்ச்சியுடன் வரவேற்பார் என்றும், மற்ற கட்சிகளைப் போல பதவி தருவதாகக் கூறி வியாபாரம் செய்யும் கட்சி தவெக அல்ல என்பதால் புதியதாக இணைந்தவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும், முந்தைய திமுக ஆட்சியில் குடும்பத்திற்காகக் கொள்ளையடிக்கவே அமைச்சரவைப் பொறுப்புகள் உருவாக்கப்பட்டன என்று விமர்சித்த அவர், தவெக அரசு பொறுப்பேற்று 30 நாட்களே ஆன நிலையில் தற்போதைய மின்சாரத் துறை அமைச்சர் ஒரு மெகாவாட் மின்சாரத்தில் கூட ஊழல் செய்தார் என்று யாராலும் கூற முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது வெங்காயத்தின் விலை சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மக்களுக்காகக் கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயம் லாரிகளில் இருந்து இறக்கப்படாமல் வீணடிக்கப்பட்டு…
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், குஜராத்தின் சூரத் மற்றும் நவசாரி பகுதிகளில் இயங்கி வரும் வணிக நிறுவனங்களைக் குறிவைத்து…
மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் முகுந்த் நகர் பகுதியில் நடைபெற்ற துயரச் சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை தாம்பரம் அருகே செல்போன் செயலி வாயிலாகப் பெண் குரலில் பேசி இளைஞர் ஒருவரைத் தனியாக வரவழைத்து, பணம் கேட்டு…
தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான அரசு கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி நடத்தி வரும் நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த தாராபுரம் மற்றும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையிலான புதிய ஆட்சியில், அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் வகிக்கும் மின் மற்றும்…